×

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ஏழு இந்திய கடற்படை அதிகாரிகள் கைது!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து இந்திய கடற்படை பற்றிய தகவலை அளித்ததாக இந்திய கடற்படையில் பணியாற்றிவந்த ஏழு பேரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். சமூக ஊடகங்களில் சிலரது பேச்சுக்களை நம்பி, கடற்படையில் பணியாற்றி வந்தவர்கள் மிகவும் ரகசியமான தகவல்களை பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுடன் பகிர்ந்துள்ளனர். இது தொடர்பாக ஏழு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று ஆந்திர டி.ஜி.பி கவுதம் தெரிவித்துள்ளார். ஆந்திரா, கடற்படை மற்றும் மத்திய உளவுப்
 

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து இந்திய கடற்படை பற்றிய தகவலை அளித்ததாக இந்திய கடற்படையில் பணியாற்றிவந்த ஏழு பேரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் சிலரது பேச்சுக்களை நம்பி, கடற்படையில் பணியாற்றி வந்தவர்கள் மிகவும் ரகசியமான தகவல்களை பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுடன் பகிர்ந்துள்ளனர். இது தொடர்பாக ஏழு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று ஆந்திர டி.ஜி.பி கவுதம் தெரிவித்துள்ளார்.




 

ஆந்திரா, கடற்படை மற்றும் மத்திய உளவுப் படை இணைந்து நடத்திய டால்ஃபின் நோஸ் என்ற ரகசிய சோதனையில் இந்த ஏழுபேரும் சிக்கினர் என்றும் கூறப்படுகிறது.

இவர்கள் விசாகபட்டினத்தில் பணியாற்றி வந்துள்ளனர். எனவே, இவர்கள்  பகிர்ந்த ரகசியங்கள் பற்றி கடற்படையின் கிழக்கு பிராந்தியமும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது. விசாகபட்டினம் என்பது கிழக்கு பிராந்திய கடற்படை தலைமையகம் மட்டுமல்ல இது அணுசக்தியால் இயங்கும் ஹரிஹந்த் நீர்மூழ்கி கப்பலின் கட்டுமான தளமும் கூட. அதனால், என்ன மாதிரியான தகவல் பரிமாறப்பட்டது என்று விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.