×

பழிக்கு பழி…இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டி கொன்ற கும்பல்: தப்பியோடிய மூவருக்கு போலீஸ் வலைவீச்சு!

சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் தப்பியோட முயன்ற நால்வரில் ஒருவரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்தனர். நெல்லை பழையபேட்டை அருகே உள்ள கண்டியப்பேரியை சேர்ந்தவர் சகாதேவன். விவசாயி. இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள். அவர்களில் 2-வது மகன் இசக்கிமுத்து என்ற கணேச பாண்டியன். இவர் நேற்றுகாலை அப்பகுதியிலிருந்த டீக்கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை கண்ட 4 பேர் கொண்ட கும்பல் இசக்கி முத்துவை சரமாரியாக வெட்டினர். இருப்பினும் அங்கிருந்துதப்பித்து ஓடிய இசக்கிமுத்துவை ஓடஓட விரட்டி
 

சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் தப்பியோட முயன்ற நால்வரில் ஒருவரை  மட்டும் போலீசார் மடக்கி பிடித்தனர். 

நெல்லை பழையபேட்டை அருகே உள்ள கண்டியப்பேரியை சேர்ந்தவர் சகாதேவன். விவசாயி. இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள். அவர்களில் 2-வது மகன் இசக்கிமுத்து என்ற கணேச பாண்டியன். இவர் நேற்றுகாலை அப்பகுதியிலிருந்த டீக்கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை கண்ட 4 பேர் கொண்ட கும்பல் இசக்கி முத்துவை சரமாரியாக வெட்டினர். இருப்பினும் அங்கிருந்துதப்பித்து ஓடிய இசக்கிமுத்துவை ஓடஓட விரட்டி வெட்டினர். இதில் இசக்கிமுத்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தகவல் கிடைக்க சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் தப்பியோட முயன்ற நால்வரில் ஒருவரை  மட்டும் போலீசார் மடக்கி பிடித்தனர். 




இதுகுறித்து நடத்திய விசாரணையில், பிடிபட்டவர்  நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த நவீன் (19) என்பது தெரியவந்தது. தப்பி ஓடியவர்கள் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூரை சேர்ந்த துரைமுத்து, நெல்லை மாவட்டம் மேலச்செவலை சேர்ந்த லட்சுமி காந்தன், தாழையூத்தை சேர்ந்த சுபா‌‌ஷ்  என்றும் ஸ்ரீவைகுண்டத்தில் கண்ணன் என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இசக்கிமுத்துவுக்கு சம்பந்தம் இருந்ததால் அவரை பழிக்கு பழியாக வெட்டி சாய்த்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பேட்டை போலீசார்  3 தனிப்படைகள் அமைத்து தப்பியோடிய மூவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.