×

பணியாற்றிய அடகுகடையில் போலி நகைகளை வைத்து 15 லட்சம் சுருட்டிய மேனேஜர்!

சந்தனபாண்டி தான் பணியாற்றிய கிளையில் 764.5 கிராம் அளவிலான போலி நகைகளை அடகுவைத்து கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபாய் மோசடி செய்திருக்கிறார். மதுரை திருநகர் முத்தூட் ஃபின்கார்ப் நிறுவன கிளையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றி வந்தவர் சந்தனபாண்டி. பேரில் சந்தனம் மணந்தாலும் செயலில் மணக்கவில்லை. அடகு வைக்க கடைக்கு வந்த வாடிக்கையாளர்களின் பெயரிலும், தனது நண்பர்களின் பெயரிலும் போலி நகைகளை தான் வேலைப்பார்த்த கிளையிலேயே அடகுவைத்து பணத்தை கையாடல் செய்திருக்கிறார். சந்தனபாண்டி தான் பணியாற்றிய
 

சந்தனபாண்டி தான் பணியாற்றிய கிளையில் 764.5 கிராம் அளவிலான போலி நகைகளை அடகுவைத்து கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபாய் மோசடி செய்திருக்கிறார்.

மதுரை திருநகர் முத்தூட் ஃபின்கார்ப் நிறுவன கிளையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றி வந்தவர் சந்தனபாண்டி. பேரில் சந்தனம் மணந்தாலும் செயலில் மணக்கவில்லை. அடகு வைக்க கடைக்கு வந்த வாடிக்கையாளர்களின் பெயரிலும், தனது நண்பர்களின் பெயரிலும் போலி நகைகளை தான் வேலைப்பார்த்த கிளையிலேயே அடகுவைத்து பணத்தை கையாடல் செய்திருக்கிறார்.

சந்தனபாண்டி தான் பணியாற்றிய கிளையில் 764.5 கிராம் அளவிலான போலி நகைகளை அடகுவைத்து கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபாய் மோசடி செய்திருக்கிறார். சந்தனபாண்டியின் நண்பர்களான காமராஜ், சூரிய கலா, சுரேந்திரன் வெங்கடேஷ் பாபு ஆகியோரது அடையாள அட்டையை பயன்படுத்தியும் சரவணன் என்ற வாடிக்கையாளருக்குத் தெரியாமல் அவரது அடையாள அட்டையைப் பயன்படுத்தியும் மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. நிறுவனத்தின் உதவி மேலாளர் காவல்துறையில் அளித்த புகாரின்பேரில் சந்தனபாண்டிக்கு காப்பு கட்ட காவல்துறை வலைவிரித்து காத்திருக்கிறது.