×

நான் உங்களோடுதான் இருக்கிறேன் ! புது வீடியோ வெளியிட்டு கல்கி பகவான் பரபரப்பு !

நாட்டையே அதிரவைத்த கல்கி பகவான் ஆசிரம விவகாரத்தில், நாட்டை விட்டு ஓடவில்லை என அதன் நிறுவனர் மேலும் ஒரு பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ளார். அது என்ன என்று பார்ப்போம் நாட்டையே அதிரவைத்த கல்கி பகவான் ஆசிரம விவகாரத்தில், நாட்டை விட்டு ஓடவில்லை என அதன் நிறுவனர் மேலும் ஒரு பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ளார். அது என்ன என்று பார்ப்போம் “எல்லோருக்கும் என் அன்பு வணக்கம். முதலில் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகளுக்கு தக்க வகையில் பதில்
 

நாட்டையே அதிரவைத்த கல்கி பகவான் ஆசிரம விவகாரத்தில், நாட்டை விட்டு ஓடவில்லை என அதன் நிறுவனர் மேலும் ஒரு பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ளார். அது என்ன என்று பார்ப்போம்

நாட்டையே அதிரவைத்த கல்கி பகவான் ஆசிரம விவகாரத்தில், நாட்டை விட்டு ஓடவில்லை என அதன் நிறுவனர் மேலும் ஒரு பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ளார். அது என்ன என்று பார்ப்போம்

“எல்லோருக்கும் என் அன்பு வணக்கம். முதலில் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகளுக்கு தக்க வகையில் பதில் அளித்து வரும் அனைத்து பக்தர்களுக்கும் நாங்கள் நன்றி கூறிக் கொள்கிறோம். முதலில் ஒரு விஷயத்தை உங்களுக்கு நான் தெளிவுபடுத்த வேண்டும். நாங்கள் நாட்டை விட்டு எங்கேயும் தப்பி ஓடவில்லை. நேமம் கிராமத்தில்தான் வசிக்கிறோம். உடல்நிலையிலும் எந்த பிரச்சனையும் இல்லை. நல்ல ஆரோக்கியத்துடன் இக்கிறேன். ஆனால் நாட்டை விட்டு ஓடிவிட்டதாக சிலர் பொய் தகவல் பரப்புகின்றனர். நான் நாட்டை விட்டு தப்பியதாக வருமாவரித்துறை கூறவில்லை. தொலைக்காட்சிகள்கள்தான் கூறி வருகிறது. நான் நேமம் கிராமத்தில்தான் தங்கியிருந்து பல்வேறு வகுப்புகள் நடத்தி வருகிறேன் என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் வரதய்யாபள்ளம் உள்ள கல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில்,  ரொக்கமாக ரூ.43.9 கோடி, வெளிநாட்டு கரன்சிகள் இந்திய மதிப்பில் ரூ. 18 கோடி, 88 கிலோ தங்க நகைகள், 1271 காரட் வைரம் என 93 கோடி ரூபாய் மதிப்பிலான கணக்கில் காட்டாத பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ன.

மேலும் 500 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதையும் வருமானவரித்துறை கண்டுபிடித்துள்ளது. விஜயகுமாரும், அவரது மகனும் இந்தியாவிலும், அமெரிக்கா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூரிலும், வரி ஏய்ப்புக்கு வசதியான வெளிநாடுகளிலும் பல நிறுவனங்களில் முதலீடுகள் செய்துள்ளதாகவும் வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.