×

தூங்க விடாமல் சத்தம் போட்டதால் 8 பேர் மீது ஆசிட் வீச்சு: அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!?

பக்கத்து வீட்டுக்காரர்களுடன் ஏற்பட்ட ஒருவர் தகராறில் 8 பேர் மீது ஆசிட் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை: பக்கத்து வீட்டுக்காரர்களுடன் ஏற்பட்ட ஒருவர் தகராறில் 8 பேர் மீது ஆசிட் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேட்டை அடுத்த நெற்குன்றம் முனியப்பா நகரைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவர் வெள்ளிப்பட்டறை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் குடியிருக்கும் வீட்டின் 2 இரண்டாவது மாடியில் கோயம்பேடு சந்தையில் கூலி வேலை செய்து வரும் அழகுமுத்து, கருப்பசாமி,
 

பக்கத்து வீட்டுக்காரர்களுடன் ஏற்பட்ட ஒருவர்  தகராறில் 8 பேர் மீது ஆசிட் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: பக்கத்து வீட்டுக்காரர்களுடன் ஏற்பட்ட ஒருவர்  தகராறில் 8 பேர் மீது ஆசிட் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோயம்பேட்டை அடுத்த நெற்குன்றம் முனியப்பா நகரைச் சேர்ந்தவர்  கன்னியப்பன். இவர் வெள்ளிப்பட்டறை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர்  குடியிருக்கும் வீட்டின்  2 இரண்டாவது மாடியில் கோயம்பேடு சந்தையில் கூலி வேலை செய்து வரும் அழகுமுத்து, கருப்பசாமி, வாஞ்சிநாதன், பி.வேல்முருகன், வீரமணி. எஸ்.வேல்முருகன், அசோக், ப.வேல்முருகன் ஆகியோர் தங்கியுள்ளனர். கன்னியப்பன் மூன்றாவது மாடியில் மனைவி ரஞ்சனியுடன் வாடகைக்குக் குடியிருக்கிறார்.

இந்நிலையில் மொட்டை மாடியில் நேற்று முன்தினம் மது அருந்திய அந்த எட்டு பேரும்  கூச்சலிட்டு ரகளை செய்ததாகத் தெரிகிறது. இதனால் இரவு நேரத்தில் தூங்க விடாமல் ஏன்  இப்படி அட்டகாசம் செய்கிறீர்கள் என்று கன்னியப்பனும்  அவரது மனைவி ரஞ்சனியும் கேட்டுள்ளனர். இதனால்  இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மதுபோதையில் நபர்கள் ரஞ்சனியையும் அவரது கணவர் கன்னியப்பனையும்  தாக்கியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த கன்னியப்பன், வெள்ளி நகைகளை பாலீஷ் செய்ய உபயோகிக்கும் ஆசிட்டை எடுத்து அவர்கள்மீது ஊற்றியுள்ளார். இதனால் அவர்கள் அலறி துடித்துள்ளனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சிலர் அவர்களை மீட்டு  அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.  இதில் அழகுமுத்து என்பவரது வலது கண்ணிலும், கருப்பசாமி என்பவரது இடது கண்ணிலும் காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரில் போலீசார் கன்னியப்பனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.