×

டிக் டோக் வீடியோவிலும் சாதி : நண்பனை கொலை செய்த வழக்கில் சிக்கிய இளைஞர் தற்கொலை; திருத்தணியில் பரபரப்பு!

டிக் டோக் வீடியோ காரணமாக நண்பனை கொலை செய்த வழக்கில் சிக்கிய இளைஞர் தற்போது தற்கொலை செய்துகொண்டார். திருத்தணி : டிக் டோக் வீடியோ காரணமாக நண்பனை கொலை செய்த வழக்கில் சிக்கிய இளைஞர் தற்போது தற்கொலை செய்துகொண்டார். திருத்தணி அருகே கார்த்திகேயபுரம் கிராமம் அருகே ஏரிக்கரையின் ஒடையில் இளைஞர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு
 

டிக் டோக்  வீடியோ காரணமாக நண்பனை கொலை செய்த வழக்கில் சிக்கிய இளைஞர் தற்போது தற்கொலை செய்துகொண்டார். 

திருத்தணி : டிக் டோக்  வீடியோ காரணமாக நண்பனை கொலை செய்த வழக்கில் சிக்கிய இளைஞர் தற்போது தற்கொலை செய்துகொண்டார். 

திருத்தணி அருகே கார்த்திகேயபுரம் கிராமம் அருகே ஏரிக்கரையின் ஒடையில் இளைஞர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில்  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது உடலுக்கு அருகில் பூச்சி மருந்து பாட்டில் மற்றும் இரு சக்கர வாகனம் இருந்ததைக் கண்டுபிடித்தனர். 

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில்,   திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே தாழவேடு கிராமத்தை சேர்ந்த நண்பர்கள் விஜய் மற்றும் வெங்கட்ராமன் இருவரும் கடந்த பிப்.21-ம் தேதி டிக் டோக்  வீடியோ எடுத்துள்ளனர். அதில்  அப்பகுதியை சேர்ந்த குறிப்பிட்ட சமூக மக்களை வெங்கட்ராமன் இழிவாக பேசி வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவை விஜய் சமூக வலைதளத்தில் வெளியிட்டதாகத் தெரிகிறது.இதை பார்த்த குறிப்பிட்ட சாதியை சேர்ந்த மக்கள், வெங்கட்ராமனை கண்டித்ததோடு வெங்கட்ராமனை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வெங்கட்ராமன், விஜய் ஆகிய இருவரும் தலைமறைவாகினர்.

 

இதனை  தொடர்ந்து வெங்கட்ராமனின் தந்தையை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதை அறிந்து கொண்ட வெங்கட்ராமன் தனது வீடியோவை வெளியிட்ட நண்பன் விஜய் மீது ஆத்திரம் கொண்டுள்ளார். இதனால் மது அருந்தி கொண்டிருந்தபோது விஜய்யை கட்டையால் தாக்கி கொலை செய்ததாக தெரிகிறது.அதன் பின்னர் விஜய் இறந்ததை உறுதி செய்த  வெங்கட்ராமன் திருத்தணி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

 

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த திருத்தணி காவல்துறையினர் வெங்கட்ராமனை கைது செய்தனர். தற்போது வெங்கடராமன் மீது கொலை வழக்கு,டிக் டோக் அவதுாறு வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில்  தனக்கு, அதிக ஆண்டுகள் தண்டனை கிடைக்கும் என்பதால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டார்’  என்பது தெரியவந்துள்ளது.