×

சென்னையில் திவீரவாதி ஒருவர் கைது: பின்னணி என்ன?

வடமாநிலத்திலிருந்து தப்பி வந்த தீவிரவாதி சென்னையில் கைதாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை: வடமாநிலத்திலிருந்து தப்பி வந்த தீவிரவாதி சென்னையில் கைதாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை கட்டுமானப்பணியில் அஸ்ஸாமைச் சேர்ந்த கந்தர்ப்பதாஸ் என்பவர் வேலை செய்து வந்துள்ளார். இருவருடன் அஸ்ஸாமை சேர்ந்த மேலும் 5 பேர் அங்கு வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களுள் மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது கந்தர்ப்பதாஸ், தான் ஒரு
 

வடமாநிலத்திலிருந்து தப்பி வந்த தீவிரவாதி சென்னையில் கைதாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை: வடமாநிலத்திலிருந்து தப்பி வந்த தீவிரவாதி சென்னையில் கைதாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அமைந்தகரை  நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை கட்டுமானப்பணியில் அஸ்ஸாமைச் சேர்ந்த கந்தர்ப்பதாஸ்  என்பவர் வேலை  செய்து வந்துள்ளார்.  இருவருடன் அஸ்ஸாமை சேர்ந்த மேலும் 5 பேர் அங்கு வேலை செய்து வந்துள்ளனர்.  

இந்நிலையில் இவர்களுள் மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது கந்தர்ப்பதாஸ், தான் ஒரு உல்பா தீவிரவாதி என்று அவர்களை மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் தகவல் கொடுத்துள்ளனர். 

இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம் தங்கள் பாதுகாப்பு பிரிவு மேலாளர் மூலம் கந்தர்ப்பதாஸ் குறித்து தகவல் திரட்டியுள்ளனர். அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்துள்ளது. கந்தர்ப்பதாஸ் உல்ஃபா தீவிரவாதியாக இருந்ததற்கான ஆதாரங்களும், அவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

இதனால்   கந்தர்ப்பதாஸ் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கந்தர்ப்பதாஸை கைது செய்தனர். மேலும் அவரிடம்  க்யூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

தீவிரவாத தாக்குதல் பல்வேறு இடங்களில் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில் சென்னையில் தீவிரவாதி ஒருவர் கைதாகி உள்ளது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் வாசிக்க: இலங்கை குண்டுவெடிப்பு; தீவிரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு!