×

கணவன் பிணத்தை பார்த்து சிரித்த மனைவி: உண்மையை கண்டுபிடித்த போலீசார்!

ஆந்திராவில் கணவனின் சடலத்தைப் பார்த்து மனைவி சிரித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மனைவியே கணவனை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது ஆந்திரா: கணவனின் சடலத்தைப் பார்த்து மனைவி சிரித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மனைவியே கணவனை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம் நகுலவரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகன்மோகன் ரெட்டி என்பவருக்கு ரஜினி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் டாக்டர். வெங்கட நாராயணா என்பவருக்கும்,
 

ஆந்திராவில் கணவனின் சடலத்தைப் பார்த்து மனைவி சிரித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மனைவியே கணவனை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது

ஆந்திரா: கணவனின் சடலத்தைப் பார்த்து மனைவி சிரித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மனைவியே கணவனை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது

ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம் நகுலவரம் கிராமத்தைச் சேர்ந்த  ஜெகன்மோகன் ரெட்டி என்பவருக்கு  ரஜினி என்ற  மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் டாக்டர். வெங்கட நாராயணா என்பவருக்கும், ஜெகன் மோகனின் மனைவி ரஜினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து கள்ளக்காதலுக்கு  இடையூறாகவுள்ள ஜெகன்மோகன் ரெட்டியை கொலை செய்ய ரஜினியும், வெங்கட நாராயணாவும் திட்டமிட்டுள்ளனர். அதன்படி  கூலிப்படையினரின் உதவியுடன் அத்மகூர் வனப்பகுதியில்  டாக்டர் வெங்கட நாராயணா,  ஜெகன்மோகனை கொலை செய்துள்ளார். திட்டப்படி ரஜினியும் தனது கணவனை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணையைத் தொடங்கிய போலீசார் வனப்பகுதியில் ஜெகன்மோகனின் உடலை கைப்பற்றியுள்ளனர்

இதை தொடர்ந்து கணவன் இறந்தது குறித்து ரஜினிக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த ரஜினி, கணவனின் உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழாமல் லேசாக சிரித்துள்ளார். ரஜினி சிரிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர் மீது சந்தேகம் அடைந்து விசாரணையை ரஜினியிடம் துவங்கினர்.  விசாரணையில் தானும், டாக்டரும் இணைந்தே தன் கணவனை கொலை செய்ததாக ரஜினி ஒப்புக்கொண்டார். இதனைத்தொடர்ந்து ரஜினி, டாக்டர் வெங்கட நாராயணா உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.