×

ஆன்லைனில் கத்தி வாங்க போறீங்களா?…. உங்க பற்றிய தகவல்களை ஆன்லைன் நிறுவனங்களிடம் கேட்கும் போலீசார்

ஆன்லைனில் கத்தி வாங்கும் வாடிக்கையாளர்கள் குறித்து தகவல்களை தரும்படி ஆன்லைன் வர்ததக நிறுவனங்களுக்கு நாக்பூர் போலீசார் உத்தரவிட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கடந்த 2 மாதங்களில் நடந்த 2 கொலைகளில் கத்தி போன்ற கூர்மையான பொருட்கள் சம்பந்தப்பட்டு இருந்தது. இந்த கொலைகள் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 2 மாதங்களில் ஆன்லைனில் மொத்தம் 122 பேர் கத்தி அல்லது கூர்மையான பொருட்களை வாங்கியுள்ளனர். அவர்களில் 30 பேருக்கு குற்றவியல் வரலாறு உள்ளது. இந்த கொலைகளுக்கும் குற்றவியல்
 

ஆன்லைனில் கத்தி வாங்கும் வாடிக்கையாளர்கள் குறித்து தகவல்களை தரும்படி ஆன்லைன் வர்ததக நிறுவனங்களுக்கு நாக்பூர் போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கடந்த 2 மாதங்களில் நடந்த 2 கொலைகளில் கத்தி போன்ற கூர்மையான பொருட்கள் சம்பந்தப்பட்டு இருந்தது. இந்த கொலைகள் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 2 மாதங்களில் ஆன்லைனில் மொத்தம் 122 பேர் கத்தி அல்லது கூர்மையான பொருட்களை வாங்கியுள்ளனர். அவர்களில் 30 பேருக்கு குற்றவியல் வரலாறு உள்ளது.

நாக்பூர் போலீசார்

இந்த கொலைகளுக்கும் குற்றவியல் வரலாறு கொண்ட இவர்களுக்கும் இடையே ஏதாவது தொடர்பு உள்ளதா என்பதை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தற்போது அவர்கள் போலீசாரின் கண்காணிப்பின்கீழ் உள்ளனர். ஆன்லைனில் கத்தி மற்றும் கூர்மையான வாங்கும் வாடிக்கையாளர்கள் குறித்து தகவல்களை தரும்படி ஆன்லைன் நிறுவனங்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

கத்திகள்

நாக்பூர் போலீஸ் கமிஷனர் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கத்தி வாங்கும் வாடிக்கையாளர்கள் தகவல்களை வழங்க வேண்டும். மேலும் வாடிக்கையாளரின் அதிகாரப்பூர்வ இமெயில் ஐ.டி.யை குற்றப்பிரிவு போலீசாருக்கு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக, ஆன்லைனில் கத்தி போன்ற கூர்மையான பொருட்களை வாங்கினால் உங்களை பற்றிய தகவல்களை போலீசார் பதிவு செய்து வைப்பர். ஆகையால் ஆன்லைனில் கத்தி வாங்குவதாக இருந்தால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்க.