×

கூட்டுறவு வங்கியில் கொள்ளையடித்த பணத்தில் அம்மாவுக்கு நகைகள், அப்பாவுக்கு கார்.. கடைசியில் சிக்கிய பாசக்கார திருடன்

மகாராஷ்டிராவில் கூட்டுறவு வங்கியில் கொள்ளையடித்த பணத்தில் அம்மாவுக்கு நகைகள், அப்பாவுக்கு பழைய கார் பரிசாக வழங்கிய பாசக்கார திருடன் கடைசியில் போலீசாரிடம் சிக்கினான். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இந்திரா காந்தி நகரின் பரனல் சதுக்கத்தில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் அண்மையில் கொள்ளை சம்பவம் நடந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கூட்டுறவு வங்கி கொள்ளை சம்பவம் தொடர்பாக 18 வயதான இளைஞர் அஜய் பஞ்சரே மற்றும் அவரது
 

மகாராஷ்டிராவில் கூட்டுறவு வங்கியில் கொள்ளையடித்த பணத்தில் அம்மாவுக்கு நகைகள், அப்பாவுக்கு பழைய கார் பரிசாக வழங்கிய பாசக்கார திருடன் கடைசியில் போலீசாரிடம் சிக்கினான்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இந்திரா காந்தி நகரின் பரனல் சதுக்கத்தில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் அண்மையில் கொள்ளை சம்பவம் நடந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கூட்டுறவு வங்கி கொள்ளை சம்பவம் தொடர்பாக 18 வயதான இளைஞர் அஜய் பஞ்சரே மற்றும் அவரது கூட்டாளி பிரதீப் தாக்கூர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல சுவாராஸ்யமான தகவல்கள் கிடைத்தது.

தங்க நகை

அஜய் பஞ்சரேவும், பிரதீப் தாக்கூரும் இணைந்து பல ஆண்டுகளாக திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். கூட்டுறவு வங்கியில் மொத்தம் ரூ.4.78 லட்சம் மதிப்பிலான விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்துள்ளனர். அஜய் பஞ்சரே தனது வருமானம் மற்றும் சொத்துக்கள் மூலம் தனது பெற்றோர்களை ஈர்க்க விரும்பினார். அதற்காக திருட்டு தொழிலில் இறங்கினார். கூட்டுறவு வங்கியில் கொள்ளையடித்த பணத்தில் அஜய் பஞ்சரே தனது அம்மாவுக்கு சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பில் நகையும், தனது தந்தைக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பிலான பழைய காரையும் பரிசாக வழங்கியுள்ளார்.

கைது

அதேசமயம் பிரதீப் தாக்கூர், தான் குழந்தையாக இருக்கும்போது தன்னை கைவிட்ட பெற்றோரை பழிவாங்க வேண்டும் என்பதாக குற்ற உலகில் நுழைந்துள்ளார். இவர்களில் ஒருவர் கூட்டுறவு வங்கியில் கொள்ளையடித்ததை வெளியே பெருமையாக பேசியுள்ளனர். அதுவே அவர்களை காட்டி கொடுத்து விட்டது. தங்களை போலீசார் அடையாளம் கொண்டு கொண்டனர் என்பதை உணர்ந்த அவர்கள் இருவரும் ராஜஸ்தானுக்கு தப்பி செல்வதற்காக ஒரு பழைய காரை வாங்கி உள்ளனர். இருப்பினும் அஜய் பஞ்சரேவையும், பிரதீப் தாக்கூருவையும் போலீசார் பிடித்து விட்டனர். கூட்டுறவு வங்கியில் கொள்ளையடித்த பணத்தில் அவர்கள் இருவரும் விலையுயர்ந்த செல்போன்களையும் வாங்கியுள்ளனர்.