×

குடிபோதையில் இருந்த கணவர் கொலை ! ஓனருடன் உல்லாசமாக இருந்த மனைவிக்கு ஏற்பட்ட கதி !

வேலூரில் சைக்கிள் கடை நடத்தி வரும் சரவணன் என்பவர் பவானி என்பவரை திருமணம் செய்து கொண்டு வசித்து வந்தார். குடிபோதைக்கு அடிமையான சரவணன் அடிக்கடி மனைவியை சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவரின் அன்பை இழந்த பவானிக்கு ஆறுதல் என்ற பெயரில் நெருங்கி பழகியுள்ளார் அவர் வேலை செய்யும் கம்பெனியின் முதலாளி வேலாயுதம். மசாலா கம்பெனியின் முதலாளியான வேலாயுதம் அசதிக்கு இல்லையென்றாலும் வசதிக்கு ஒன்று வைத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்து கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த பவானியின்
 

வேலூரில் சைக்கிள் கடை நடத்தி வரும் சரவணன் என்பவர் பவானி என்பவரை திருமணம் செய்து கொண்டு வசித்து வந்தார்.

குடிபோதைக்கு அடிமையான சரவணன் அடிக்கடி மனைவியை சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவரின் அன்பை இழந்த பவானிக்கு ஆறுதல் என்ற பெயரில் நெருங்கி பழகியுள்ளார் அவர் வேலை செய்யும் கம்பெனியின் முதலாளி வேலாயுதம். மசாலா கம்பெனியின் முதலாளியான வேலாயுதம் அசதிக்கு இல்லையென்றாலும் வசதிக்கு ஒன்று வைத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்து கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த பவானியின் கணவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளார். பின்னர் இதுகுறித்து பவானியிடம் கணவரை தீர்த்துக்  கட்டிவிட்டால் பின்னர் நிம்மதியாக நாம் சந்தோஷமாக வாழலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும் கணவர் தற்கொலை செய்து கொண்டது போலவே செட்டப் செய்துவிடலாம் என்றும் நம்பிக்கை அளித்துள்ளார் வேலாயுதம்.

இதை நம்பிய பவானி அன்றாடம் அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடும் குடிகார கணவனுடன் வாழ்வதை விட கம்பெனி முதலாளியுடன் நெருங்கி பழகினால் வசதியாக வாழலாம் என முடிவெடுத்து கணவரை கொல்ல சம்மதித்துள்ளார்.

பின்னர் நேற்று முன்தினம் குடிபோதையில் வந்த சரவணனின் கை, கால்களை கட்டிப்போட்டு கழுத்தை நெறித்து 2 பேரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர். பின்னர் அவரை துப்பட்டாவை கழுத்தில் கட்டி தூக்கில் தொங்க விட்டுள்ளனர்.

பின்னர் அக்கம் பக்கத்தாரை அழைத்து கணவர் குடிபோதையில் தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடினார் பவானி. ஆனால் சரவணனின் உடற்கூறு ஆய்வறிக்கையில் அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை கொல்லப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பவானியை போலீசார் வளையில் சிக்கி அவரும், மசாலா கம்பெனி ஓனரும் சிறையில் தங்களைது காதலை தொடர்ந்து வருகின்றனர்.