×

கின்னஸ் சாதனை படைத்த நடிகை விஜயநிர்மலாவுக்கு சிலை…மகனும் நடிகருமான மகேஷ் பாபு பங்கேற்பு!

ம்ஜிஆரின் என் அண்ணன் படத்தில் முத்துராமனுக்கு ஜோடியாக நடித்த இவர் இதுவரை சுமார் 200 படங்களில் நடித்து அசத்தியுள்ளார். தமிழ் தெலுங்கு ,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தவர் நடிகை விஜயநிர்மலா. இவர் தமிழில் பணமா பாசமா படத்தில் எலந்தப்பழம் பாடலில் இவர் ஆடி நடித்த நடனமானது இன்று வரை பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. எம்ஜிஆரின் என் அண்ணன் படத்தில் முத்துராமனுக்கு ஜோடியாக நடித்த இவர் இதுவரை சுமார் 200 படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
 

ம்ஜிஆரின் என் அண்ணன் படத்தில் முத்துராமனுக்கு ஜோடியாக நடித்த இவர் இதுவரை சுமார் 200 படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.  

தமிழ் தெலுங்கு ,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தவர் நடிகை  விஜயநிர்மலா. இவர் தமிழில் பணமா பாசமா படத்தில் எலந்தப்பழம் பாடலில் இவர் ஆடி நடித்த நடனமானது இன்று வரை பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. எம்ஜிஆரின் என் அண்ணன் படத்தில் முத்துராமனுக்கு ஜோடியாக நடித்த இவர் இதுவரை சுமார் 200 படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.  

 

நடிப்பு மட்டுமில்லாது இயக்கத்திலும் ஆர்வம் கொண்ட விஜயநிர்மலா இதுவரை 44 படங்களை இயக்கிய  பெண் இயக்குநர்  என்ற பெருமைக்கு சொந்தக்காரர். இதன் காரணமாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குநர் என்ற பெருமையை பெற்றார்.

 

நடிப்பு, இயக்கம் என இயங்கி வந்த  விஜயநிர்மலா தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவை மணந்துக் கொண்டார். இவருக்கு நரேஷ் என்ற மகனும் உள்ளார்.

 

சமீபத்தில்  உடல் நலம் பாதிக்கப்பட்டு   ஹைதராபாத் காண்டினென்ட்டல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விஜயநிர்மலா, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் தேதி  மாரடைப்பால் காலமானார். 

இந்நிலையில் இன்று நடிகை  விஜய நிர்மலாவின் 74 ஆவது  பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. திரையுலகில்  நடிகை, இயக்குநர்  மற்றும் தயாரிப்பாளராகச் செய்த அவரின்  பங்களிப்பை கொண்டாடும் வகையில் நடிகை  விஜய நிர்மலாவிற்கு ஐதராபாத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது.

இந்த விழாவில் நடிகர் கிருஷ்ணாவின் முதல் மனைவியின் மகனான நடிகர் மகேஷ் பாபு கலந்துகொண்டார்.