×

கால் டாக்ஸி வைத்து நாயை திருடிச்சென்ற ஜோடி! சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தேடும் போலீஸ்!!

பணத்திற்காகவும், முன்பகை காரணமாகவும் முன்பெல்லாம் ஆட்கடத்தல் சம்பவங்கள் நடைபெற்றிருப்பதை கேள்விபட்டிருப்போம். ஆனால் தற்போது கால்டாக்சி வைத்து விலை உயர்ந்த நாய் ஒன்று கடத்திச்செல்லப்பட்டிருக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. பணத்திற்காகவும், முன்பகை காரணமாகவும் முன்பெல்லாம் ஆட்கடத்தல் சம்பவங்கள் நடைபெற்றிருப்பதை கேள்விபட்டிருப்போம். ஆனால் தற்போது கால்டாக்சி வைத்து விலை உயர்ந்த நாய் ஒன்று கடத்திச்செல்லப்பட்டிருக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை தியாகராய நகரைச் சேர்ந்தவர் சரத். ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வரும் அவர், 40ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கோல்டன் ரெட்ரீவர் என்ற
 

பணத்திற்காகவும், முன்பகை காரணமாகவும் முன்பெல்லாம் ஆட்கடத்தல் சம்பவங்கள் நடைபெற்றிருப்பதை கேள்விபட்டிருப்போம். ஆனால் தற்போது கால்டாக்சி வைத்து விலை உயர்ந்த நாய் ஒன்று கடத்திச்செல்லப்பட்டிருக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. 

பணத்திற்காகவும், முன்பகை காரணமாகவும் முன்பெல்லாம் ஆட்கடத்தல் சம்பவங்கள் நடைபெற்றிருப்பதை கேள்விபட்டிருப்போம். ஆனால் தற்போது கால்டாக்சி வைத்து விலை உயர்ந்த நாய் ஒன்று கடத்திச்செல்லப்பட்டிருக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. 

சென்னை தியாகராய நகரைச் சேர்ந்தவர் சரத். ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வரும் அவர், 40ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கோல்டன் ரெட்ரீவர் என்ற வகையைச் சேர்ந்த நாய்க்கு, ஜாக்கி என்று பெயரிட்டு குழந்தையை போல் செல்லமாக வளர்த்து வந்துள்ளார். இந்த வகை நாய்கள் அனைவரிடமும் எளிதில் பழகி குழந்தையை போல் விளையாடும் பண்பை கொண்டவை. நாயை வீட்டில் கட்டிப்போடும் பழக்கம் இல்லை.

இதனால், அந்த நாய் வீட்டில் ஒரு உறுப்பினர் போல் வளர்ந்து வந்திருக்கிறது. இரவு எத்தனை மணியானாலும் உரிமையாளர் சரத்தின் வருகையை எதிர்பார்த்து வீட்டிற்குமுன் காத்திருக்குமாம் அந்த நாய். அவர் வந்த பிறகே சாப்பிடுமாம் ஜாக்கி. இதைத்தொடர்ந்து நோட்டமிட்டு வந்திருக்கும் அடையாளம் தெரியாத நபர்கள், கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த நாயை கடத்திச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக பாண்டி பஜார் காவல்நிலையத்தில், சிசிடிவி வீடியோ ஆதாரத்துடன் சரத் புகார் கொடுத்திருக்கிறார்.

பெண் ஒருவரும், வெள்ளை நிற டீசர்ட் அணிந்திருந்த இளைஞர் ஒருவரும் வீட்டிற்கு வெளியில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த நாய்க்கு பிஸ்கட்டை போட்டு காருக்குள் இழுத்துச்சென்று கடத்திச்செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியிருக்கின்றன. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரானது, கால்டாக்ஸி என்று காவல்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர். காவல்நிலையத்தில் புகார் அளித்தது மட்டுமல்லாமல், நாயின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு சரத் தேடி வருகிறார். நாயை கண்டுபிடித்து தருவோருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் சரத் தெரிவித்துள்ளார்.

கோல்டன் ரெட்ரீவர் ரக நாய்கள் அனைவரிடமும் எளிதில் பழகி செல்லமாக விளையாடக் கூடியவை. அதன் பண்புகள், குழந்தைகள் தொடங்கி, பெரியவர் வரை ஈர்க்கக் கூடியவை.