×

காதல் தோல்வியால் தற்கொலை: கிரிக்கெட் காதலனின் உடலை மைதானத்தில் வைத்து கதறி அழுத நண்பர்கள் கூட்டம்!

கிரிக்கெட் மீது தீராத காதல் கொண்ட இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர்: கிரிக்கெட் மீது தீராத காதல் கொண்ட இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் வடக்கு வீதியைச் சேர்ந்தவர் அழகப்பன். 27 வயதான இவர் கிரிக்கெட் மீது தீராத காதலுடன் இருந்துள்ளார். வழக்கமாக இவர் விளையாடும் பீட்டர் பள்ளி மைதானத்தில் அழகப்பன் பேட்டுடன் இறங்கினாலே எதிரணியினருக்கு நடுக்கம் ஏற்படும் அளவுக்கு கிரிக்கெட்டில் கில்லியாக
 

கிரிக்கெட் மீது தீராத காதல் கொண்ட இளைஞர் ஒருவர்  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சாவூர்: கிரிக்கெட் மீது தீராத காதல் கொண்ட இளைஞர் ஒருவர்  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சாவூர் வடக்கு வீதியைச் சேர்ந்தவர் அழகப்பன். 27 வயதான இவர் கிரிக்கெட் மீது தீராத காதலுடன் இருந்துள்ளார். வழக்கமாக இவர் விளையாடும் பீட்டர் பள்ளி மைதானத்தில் அழகப்பன் பேட்டுடன் இறங்கினாலே  எதிரணியினருக்கு  நடுக்கம் ஏற்படும் அளவுக்கு கிரிக்கெட்டில் கில்லியாக  இருந்துள்ளார். இவரின் ஆட்டத்திறமையால் பல கோப்பைகளை வெல்லும் இவருக்கு ரசிகர் கூட்டம் ஏராளமாம்.

இந்நிலையில் அழகப்பன் ஒரு பெண்ணை தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த காதல் தோல்வியில் முடியவே கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு எலி மருந்து சாப்பிட்டு  தற்கொலைக்கு முயன்றுள்ளார். அழகப்பனை அவரது உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருப்பினும் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த செய்தியைக் கேள்விப்பட்ட அவரது நண்பர்கள் கதறி அழுதனர். பிரேத பரிசோதனை முடிந்து அழகப்பனின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.  அதைப் பின் தொடர்ந்து வந்த அவரது நண்பர் கூட்டம், அழகப்பன் நேசித்த, காலை, மாலை எனப் பொழுதைக் கழித்த பீட்டர் பள்ளி மைதானத்திற்கு ஆம்புலன்ஸை கொண்டு சென்றனர். மைதானத்தை மூன்று சுற்று சுற்ற  வைத்த  அவர்கள், எழுந்துவாடா, கிரிக்கெட் விளையாடலாம்? நீ இல்லாம நாங்க என்னடா பண்ணப்போறோம்? என்று கதறினர். இது அங்கிருந்த அனைவரது  கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. பின்பு இறுதிச் சடங்கு முடிந்த பிறகு அழகப்பனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

அனுதினமும் கிரிக்கெட்டில் வெற்றி பெற்று தோல்வியே காணாத  அழகப்பன், காதல் தோல்விக்காக  உயிரை மாய்த்துக் கொண்டு   வாழ்க்கையில் முதல்முறையாக  தோற்றுவிட்டார்.