×

காதல், தகாத உறவால் 44 ஆயிரத்து 412 கொலைகள்…அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

இந்தியாவில் கொலைக்கான காரணத்தைத் தேசிய குற்ற ஆவண காப்பகம் ஆய்வு செய்துள்ளது. இந்தியாவில் கொலை குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. ஒவ்வொரு குற்ற சம்பவத்துக்குப் பின்னால் ஒரு பின்னணி உள்ளது. அந்த வகையில் இந்தியாவில் கொலைக்கான காரணத்தைத் தேசிய குற்ற ஆவண காப்பகம் ஆய்வு செய்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2011 முதல் 2017 ஆம் ஆண்டுகளில் தனிநபர் பழிவாங்குதல் அடிப்படையில் சுமார் 67 ஆயிரத்து 774 கொலைகள் நடந்துள்ளன. அடுத்த படியாக சொத்து
 

இந்தியாவில் கொலைக்கான காரணத்தைத்  தேசிய குற்ற ஆவண காப்பகம் ஆய்வு செய்துள்ளது.

இந்தியாவில் கொலை குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. ஒவ்வொரு குற்ற சம்பவத்துக்குப் பின்னால் ஒரு பின்னணி உள்ளது. அந்த வகையில் இந்தியாவில் கொலைக்கான காரணத்தைத்  தேசிய குற்ற ஆவண காப்பகம் ஆய்வு செய்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2011 முதல் 2017 ஆம் ஆண்டுகளில் தனிநபர் பழிவாங்குதல் அடிப்படையில் சுமார் 67 ஆயிரத்து 774 கொலைகள் நடந்துள்ளன. அடுத்த படியாக சொத்து பிரச்னை காரணமாக 51 ஆயிரத்து 554 கொலைகள் அரங்கேறியுள்ளன.

அடுத்தபடியாக காதல் விவகாரம், முறையற்ற உறவு ஆகியவை சம்பந்தமாக நடந்த  குற்றச்சம்பவங்கள் இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. 44 ஆயிரத்து 412 கொலைகள் நடந்துள்ளன. இதில் 2016 ஆம் ஆண்டு மட்டும் 71 ஆணவ கொலைகளும், 2017 இல் அது 93 ஆக உயர்ந்துள்ளதும்’  கவனிக்கத்தக்கது.