×

கணவரின் மகளை கொன்ற இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 22 வருட சிறை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!?

வளர்ப்பு மகளை கொன்ற இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 22 வருடம் சிறைத் தண்டனை அளித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நியூயார்க்: வளர்ப்பு மகளை கொன்ற இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 22 வருடம் சிறைத் தண்டனை அளித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள குயின்ஸ் நகரத்தில் வசித்து வந்தவர் சுக்ஜிந்தர் சிங். இவருக்கு 9 வயதில்அஷ்தீப் கவுர் என்ற மகள் இருந்தார். சுக்ஜிந்தர் சிங் தனது மனைவியைப் பிரிந்த நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷம்தாய்
 

வளர்ப்பு மகளை கொன்ற இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 22 வருடம் சிறைத் தண்டனை அளித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நியூயார்க்: வளர்ப்பு மகளை கொன்ற இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 22 வருடம் சிறைத் தண்டனை அளித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள  குயின்ஸ் நகரத்தில் வசித்து வந்தவர் சுக்ஜிந்தர் சிங். இவருக்கு  9 வயதில்அஷ்தீப் கவுர் என்ற மகள் இருந்தார். சுக்ஜிந்தர் சிங் தனது மனைவியைப் பிரிந்த நிலையில்,  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷம்தாய் அர்ஜூன் இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார்.

இதைத் தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு  19 ஆம் தேதி, சிறுமி அஷ்தீப் கவுர் மர்மமான முறையில் குளியலறையில் இறந்து கிடந்தார். இது குறித்துக் கூறிய ஷம்தாய் தவறி விழுந்து இறந்து விட்டதாக போலீஸ் விசாரணையில் கூறினார். இதையடுத்து வெளிவந்த பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுமி அஷ்தீப் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஷம்தாய் கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை,  ஷம்தாய் குற்றவாளி என கடந்த மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது.  இதையடுத்து தண்டனை விவரமானது நேற்று தீர்ப்பு வெளியானது. அதில்,  ஷம்தாய்க்கு 22 வருடம் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.