×

கணவனைக் கொன்று ஆற்றில் புதைத்த மனைவி | கள்ளக்காதலால்  விபரீதம் 

வேலை நிமித்தமாக வெளியூர் சென்றால் ஓரிரு நாட்களுக்குள்ளோ அல்லது ஒரு வாரத்திலோ ஊர் திரும்பிவிடும் முருகன், நீண்ட நாட்களாக வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் முருகனைப் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர் கள்ளக்காதல் விவகாரத்தில், கணவனைக் கொன்று, பிணத்தை ஆற்றில் புதைத்த மனைவியையும், கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே நிகழ்ந்துள்ளது. இவர்களுக்கு சிந்துஜா(9), சைலஜா(2) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். விழுப்புரம் மாவட்டம் வெளியனூர் கிராமத்தை சேர்ந்தவர்
 

வேலை நிமித்தமாக வெளியூர் சென்றால் ஓரிரு நாட்களுக்குள்ளோ அல்லது ஒரு வாரத்திலோ ஊர் திரும்பிவிடும் முருகன், நீண்ட நாட்களாக வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் முருகனைப் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்

கள்ளக்காதல் விவகாரத்தில், கணவனைக் கொன்று, பிணத்தை ஆற்றில் புதைத்த மனைவியையும், கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே நிகழ்ந்துள்ளது. 

இவர்களுக்கு சிந்துஜா(9), சைலஜா(2) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். விழுப்புரம் மாவட்டம் வெளியனூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். நாற்பது வயதான இவர், மரம் ஏறும் தொழிலாளி. இவரது மனைவி பாக்கியலட்சுமி (32) . மரம் ஏறும் தொழில் செய்து வந்ததால், முருகன் அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்று வருவார்.  அதே போல் கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி வேலைக்குச் சென்ற முருகன் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. 

வேலை நிமித்தமாக வெளியூர் சென்றால் ஓரிரு நாட்களுக்குள்ளோ அல்லது ஒரு வாரத்திலோ ஊர் திரும்பிவிடும் முருகன், நீண்ட நாட்களாக வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் முருகனைப் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். தொடர்ந்து முருகனைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால், முருகனின் மனைவி பாக்கியலட்சுமி,  மாயமான தனது கணவரை கண்டுபிடித்து தரக்கோரி மயிலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.  

அவரின் புகாரின் பேரில், மயிலம் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து மாயமான முருகனை தேடி வந்தனர். இந்நிலையில், 28.4.2019 அன்று மயிலத்தையடுத்த கொடுக்கூர் சங்கராபரணி ஆற்றில் ஆண் பிணம் ஒன்று பாதி புதைக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக மயிலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்குச் சென்று பிணத்தை கைப்பற்றி போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், புதைக்கப்பட்டிருந்தது, மாயமான தொழிலாளி முருகன் என்பதும், அவரை யாரோ கொலை செய்து பிணத்தை ஆற்றில் புதைத்துவிட்டு சென்றிருப்பதும் தெரியவந்தது.அதைத் தொடர்ந்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. 

அந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில், முருகனின் செல்போனை கொடிமா கிராமத்தை சேர்ந்த சங்கர்(40) என்பவர் பயன்படுத்தி வந்ததையும் கண்டுபிடித்தனர். சங்கரைப் பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில்,  அவர் தென்ஆலப்பாக்கத்தை சேர்ந்த கலியமூர்த்தி(45) என்பவருடன் சேர்ந்து முருகனை கொலை செய்து ஆற்றில் புதைத்தது தெரியவந்தது. மேலும் முருகனின் மனைவி பாக்கியலட்சுமிக்கும் அவரது உறவினர் கலியமூர்த்திக்கும் சுமார் 4 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததும், அதற்கு இடையூறாக இருந்த முருகனை திட்டம் போட்டு அழைத்துச் சென்று நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து சங்கராபரணி ஆற்றில் புதைத்ததும் தெரியவந்தது. 

பின்னர் முருகன் மாயமான வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி சங்கர், கலியமூர்த்தி மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த பாக்கியலட்சுமி ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

கணவரைக் காணவில்லை என்று போலீஸ் நிலையத்தை புகார் அளித்து, அந்த கிராமத்திலும் இத்தனை நாட்களாக கணவன் காணாமல் போன துக்கத்தில் இருப்பதாக  நடித்து வந்த மனைவியே, கணவரைக் கொலை செய்ய உடந்தையாக இருந்தது அந்த பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.