×

“ஒழுங்கா கணக்கு போடு ,இல்லேன்னா ஸ்கூலை விட்டு ஓடு “- தாக்கிய வாத்தியார் நிலைமை என்னாச்சி தெரியுமா ? 

ஹரியானாவின் ஜிண்டைச் சேர்ந்த ஒரு 3 ஆம் வகுப்பு மாணவி கணக்கு ஒழுங்காக போடாமல் போனதற்காக அவரது கணக்கு ஆசிரியரால் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, ஜிந்தின் ஷாடிபூர் கிராமத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் நடந்தது. செவ்வாய்க்கிழமை சிறுமியின் பெற்றோர் அந்த ஆசிரியர் மீது போலீசில் புகாரளித்தனர் இது பற்றி சிறுமியின் தாய் கூறுகையில் தனது 8 வயது மகளை, அரசு பள்ளியில் அசோக்குமார் என்ற கணித ஆசிரியர் கணக்கு சரியாக போடாமல் போனதால்
 

ஹரியானாவின் ஜிண்டைச் சேர்ந்த ஒரு 3 ஆம் வகுப்பு மாணவி கணக்கு ஒழுங்காக போடாமல் போனதற்காக அவரது கணக்கு ஆசிரியரால் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, ஜிந்தின் ஷாடிபூர் கிராமத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் நடந்தது. செவ்வாய்க்கிழமை சிறுமியின் பெற்றோர் அந்த ஆசிரியர் மீது போலீசில் புகாரளித்தனர் 

இது பற்றி சிறுமியின் தாய் கூறுகையில்  தனது 8 வயது மகளை, அரசு பள்ளியில் அசோக்குமார் என்ற கணித ஆசிரியர் கணக்கு சரியாக போடாமல் போனதால் அடித்ததாக கூறினார். இதனால். சிறுமியின் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. 

மேலும் இந்த சம்பவம் மைனர் குழந்தையின் மனதிலும் உடம்பிலும் காயத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த காயத்தால் , 8 வயது சிறுமி  மூன்று நாட்கள் உணவு சாப்பிட முடியாமல் பாதிப்புக்குள்ளானதாகவும்  சிறுமியின் தாயார் போலீசுக்கு அளித்த புகாரில் கூறினார். போலீசார் அந்த ஆசிரியரை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர் .