×

ஒரே வீட்டில் அடுத்தடுத்து கற்பழித்து கொலை! கதறியழும் தாய்! அலட்சியப்படுத்தும் போலீசார்!

நாடு முழுவதுமே பல குற்ற வழக்குகளில் போலீசாரின் அலட்சியப் போக்கினால் அப்பாவி உயிர்கள் பலியாவதை காண்கிறோம். சில அதிகாரிகள் கடமையைச் செய்யாமல் மெத்தனப் போக்கில் இருப்பதால் குற்றவாளிகளுக்கு வசதியாகப் போய் விடுகிறது. கேரள மாநிலம் வாளையாரில் ஒரே வீட்டில் அடுத்தடுத்து அக்காவும், தங்கையும் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதுமே பெரிய அதிர்வலைகளை எழுப்பியது. நாடு முழுவதுமே பல குற்ற வழக்குகளில் போலீசாரின் அலட்சியப் போக்கினால் அப்பாவி உயிர்கள் பலியாவதை காண்கிறோம். சில அதிகாரிகள்
 

நாடு முழுவதுமே பல குற்ற வழக்குகளில் போலீசாரின் அலட்சியப் போக்கினால் அப்பாவி உயிர்கள் பலியாவதை காண்கிறோம். சில அதிகாரிகள் கடமையைச் செய்யாமல் மெத்தனப் போக்கில் இருப்பதால் குற்றவாளிகளுக்கு வசதியாகப் போய் விடுகிறது. கேரள மாநிலம் வாளையாரில் ஒரே வீட்டில் அடுத்தடுத்து அக்காவும், தங்கையும் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதுமே பெரிய அதிர்வலைகளை எழுப்பியது.

நாடு முழுவதுமே பல குற்ற வழக்குகளில் போலீசாரின் அலட்சியப் போக்கினால் அப்பாவி உயிர்கள் பலியாவதை காண்கிறோம். சில அதிகாரிகள் கடமையைச் செய்யாமல் மெத்தனப் போக்கில் இருப்பதால் குற்றவாளிகளுக்கு வசதியாகப் போய் விடுகிறது. கேரள மாநிலம் வாளையாரில் ஒரே வீட்டில் அடுத்தடுத்து அக்காவும், தங்கையும் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதுமே பெரிய அதிர்வலைகளை எழுப்பியது.  கேரள மாநிலம் வாளையார் பகுதியைச் சேர்ந்த தம்பதியர் ஷாஜி, பாக்கியம். இவர்களுக்கு 13, 9 வயதுகளில் இரண்டு மகள்கள் இருந்தனர். ஆமாம்… முன்பு இருந்தனர். கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி இவர்களுடைய மூத்த மகளான 13 வயது சிறுமி தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார். வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லாத போது, படிப்பிலும் படு சுட்டியான 13 வயது பெண் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்துக் கொள்வாளா? என்று அப்போதே இது பரபரப்பாக பேசப்பட்டது. அந்த சமயத்தில் போலீசாரின் விசாரணையின், இறந்து போன சிறுமியின் 9 வயது தங்கை, தங்கள் வீட்டில் இருந்து முகமூடி அணிந்தபடி சிலர் வெளியே சென்றனர் என்று கூறியுள்ளார். தங்கையின் சாட்சியத்தைப் பெரிதுபடுத்தாத போலீசார் இந்த வழக்கை அலட்சியமாகக் கையாண்டு தற்கொலை வழக்காக முடித்து வைத்து விட்டதாகக் கூறப்படுகிறது. அடுத்த 2 மாதத்திற்குள் இறந்து போன சிறுமியின் 9 வயது தங்கையும் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார். பிரேதப் பரிசோதனை முடிவில் சிறுமிகள் இருவருமே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.

முதல் பெண் இறந்த போதே, போலீசாரின் விசாரணையில், தங்கள் உறவினர் ஒருவர் சிறுமிகளிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், அவரைக் கண்டித்ததாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இரண்டாவது பெண்ணும் அதே முறையில் கொலைச் செய்யப்பட்டவுடன் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி 5 பேரைக் கைது செய்தனர். அதன் பிறகு வழக்கில் போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி பிரதீப் குமார் என்பவரை விடுதலை செய்தனர். கடந்த வாரம் மேலும் 3 பேரை விடுதலை செய்தனர். 
குற்றவாளிகள் அனைவரும் விடுதலையானது குறித்து பேசிய சிறுமியின் தாய், “மரணம் என்றால் என்ன என்பது கூட தெரியாத வயது என்னுடைய பெண்களுக்கு. அப்படியிருக்கும் போது எப்படி எனது மகள்கள் தூக்கில் தொங்கியிருப்பார்கள். சரியாக கயிற்றின் முடிச்சைக் கூடப் போடத் தெரியாது. என் கணவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

அவர் எதிரிலேயே எனது மூத்த மகளை அவர்கள் பாலியல் ரீதியில் தொல்லைக் கொடுத்தனர். அவர் தொடர்ந்து சத்தம் போட்டவுடன் அங்கிருந்து ஓடிவிட்டார்கள். இது எனக்குத் தெரிந்த பிறகு நான் அவர்களைத் திட்டினேன். நான் அவர்களைத் திட்டி சரியாக ஒரே மாதத்தில் எனது பெண்ணை உயிரற்ற நிலையில் பார்த்தேன். எதுவும் தெரியாத அந்த சின்னஞ்சிறு பெண்களைக் கொலைச் செய்து அப்படி எதை சாதித்து விட்டீர்கள். இந்த குற்றவாளிகளைக் காப்பாற்ற துடிப்பவர்கள் வீட்டில் குழந்தைகளே கிடையாதா?’ என்று கதறியழுதது பார்ப்போர்களின் நெஞ்சை கரைப்பதாக இருந்தது.