×

என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் உடல்களையும் பதப்படுத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

சட்டத்தின் முன் நிறுத்தாமல் காவல்துறை என்கவுண்டரில் சுட்டு கொன்றது வன்முறை என்று ஒருதரப்பினர் வாதிட்டு வருகின்றனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான பிரியங்கா ரெட்டியை கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுபோதையிலிருந்த சென்னகேசவலு, நவீன் உள்ளிட்ட நால்வர் திட்டமிட்டு கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொன்றதுடன் பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட முகமது பாஷா, நவீன், சின்ன கேசவலு மற்றும் ஷிவா ஆகிய நால்வரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு
 

சட்டத்தின் முன் நிறுத்தாமல்  காவல்துறை என்கவுண்டரில்  சுட்டு கொன்றது வன்முறை என்று ஒருதரப்பினர் வாதிட்டு வருகின்றனர். 

ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான பிரியங்கா ரெட்டியை கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுபோதையிலிருந்த  சென்னகேசவலு, நவீன் உள்ளிட்ட நால்வர் திட்டமிட்டு கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொன்றதுடன்  பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.  

இந்த  கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட முகமது பாஷா, நவீன், சின்ன கேசவலு மற்றும் ஷிவா  ஆகிய நால்வரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் நேற்று  அதிகாலை 3 மணியளவில்  அவர்கள் தப்பியோட முயன்றதால்  சுட்டுக்கொன்றதாக  சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் தெரிவித்துள்ளார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேசமயம் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தாமல்  காவல்துறை என்கவுண்டரில்  சுட்டு கொன்றது வன்முறை என்று ஒருதரப்பினர் வாதிட்டு வருகின்றனர். 

இந்நிலையில், என்கவுண்டர் குறித்து தெலுங்கனா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இதை விசாரித்த நீதிபதிகள், சுட்டுக்கொல்லப்பட்ட நால்வரின் உடல்களையும் வரும் 9ஆம் தேதி மாலை 6 மணிவரை பதப்படுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளனர். மேலும் இவர்களின் பிரேத பரிசோதனை வீடியோவை சிடி  அல்லது பெண்ட்ரைவ்வில் நீதிமன்ற  பதிவாளரிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டதோடு, இந்த வழக்கின் விசாரணையை நாளை மறுதினத்திற்கு ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.