×

‘என் 30 ஆண்டு பகையை தீர்த்து விட்டேன்’: கணவனை கொன்ற வழக்கில் மனைவியின் பகீர் வாக்குமூலம்!

தூங்கிக்கொண்டிருந்த கணவனை கட்டையால் அடித்து பெண் ஒருவர் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் : தூங்கிக்கொண்டிருந்த கணவனை கட்டையால் அடித்து பெண் ஒருவர் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம், செந்துறையை சேர்ந்தவர் ராமு. கூலி தொழிலாளியான இவருக்கு அசலாம்பாள் என்ற மனைவியும், ராம்குமார் மற்றும் அருள் என்ற இரு மகன்களும் இருந்துள்ளனர். மகன்கள் இருவரும் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளனர். திருமணமாகி 30 ஆண்டுகளாகியும் ராமு, அசலாம்பாளை சந்தேகித்துக் குடித்து விட்டு அடித்து
 

தூங்கிக்கொண்டிருந்த கணவனை கட்டையால் அடித்து பெண் ஒருவர் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அரியலூர் : தூங்கிக்கொண்டிருந்த கணவனை கட்டையால் அடித்து பெண் ஒருவர் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அரியலூர் மாவட்டம், செந்துறையை சேர்ந்தவர்  ராமு. கூலி தொழிலாளியான இவருக்கு அசலாம்பாள் என்ற மனைவியும், ராம்குமார் மற்றும் அருள் என்ற இரு மகன்களும் இருந்துள்ளனர். மகன்கள் இருவரும் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளனர். திருமணமாகி 30 ஆண்டுகளாகியும் ராமு, அசலாம்பாளை சந்தேகித்துக் குடித்து விட்டு அடித்து வந்ததாகக் கூறப்படுகிறது.  இதனால் அசலாம்பாள் கடந்த சில ஆண்டுகளாக மன உளைச்சலில், மனநிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில் ராமு சில தினங்களுக்கு முன்பு கோவில் திருவிழாவில் இரவு நடந்த கரகாட்டத்தைப்  பார்த்துவிட்டு  வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அசலாம்பாள் அங்கிருந்த கட்டையைக் கொண்டு ராமுவை தலையில் ஓங்கி அடித்துள்ளார்.இதில் படுகாயம் அடைந்த ராமு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். 

இதையடுத்து  வீட்டை பூட்டி விட்டு அருகிலிருந்த கோவிலுக்கு சென்ற அசலாம்பாள் அங்கு சூடம் ஏற்றி சாமி கும்பிட்டார். அப்போது 30 ஆண்டு பகையை தீர்த்து விட்டேன் என்று கூறி ஆர்ப்பரித்துள்ளார். இதைக்கேட்ட அப்பகுதிவாசிகள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது,ராமு இறந்து கிடந்துள்ளார். 

இதுகுறித்து தகவல் அறிந்த இரும்புலிக்குறிச்சி போலீசார்  ராமுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அசலாம்பாளை கைது செய்து ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி லால்குடி மகளிர் சிறையில் அடைத்தனர். 

இது குறித்து போலீசில் கூறிய அசலாம்பாள், பலருடன் என்னை தொடர்புப்படுத்திப் பேசி வந்தார். அதனால்  என் பகையை தீர்த்தேன். ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்தது போல் இருக்கிறது. என் புருஷனை கொன்றதில் எனக்கு துளிகூட வருத்தம் இல்லை’ என்றாராம். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.