×

‘உனக்கு மூக்கு பெருசா இருக்கு’…மாப்பிள்ளையை பாதியிலேயே தவிக்க விட்டுவிட்டு ஓடிய மணப்பெண்!

ரூ 1 லட்சம் முன்பணமாகக் கொடுக்கப்பட்டு, சமையல் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.ஆடைகள் மற்றும் பரிசுப்பொருட்கள் என 4 லட்சம் வரை செலவு செய்துள்ளனர். பெங்களூரு கோரமங்களாவைச் சேர்ந்தவர் ரமேஷ். கம்ப்யூட்டர் இன்ஜினியரான இவருக்கும் அமெரிக்காவில் வேலை செய்து வரும் நிலையில் ராஷ்மி என்பவருக்கும் திருமண வரன் பார்க்கும் இணையதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இதையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் பெங்களூரு வந்த ராஷ்மி மற்றும் அவருடைய சகோதரி லட்சுமி இருவரும் ரமேஷை சந்தித்துப்
 

ரூ 1 லட்சம் முன்பணமாகக் கொடுக்கப்பட்டு, சமையல் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.ஆடைகள் மற்றும் பரிசுப்பொருட்கள் என 4 லட்சம் வரை செலவு செய்துள்ளனர். 

பெங்களூரு கோரமங்களாவைச் சேர்ந்தவர் ரமேஷ். கம்ப்யூட்டர் இன்ஜினியரான இவருக்கும்  அமெரிக்காவில் வேலை செய்து வரும் நிலையில் ராஷ்மி என்பவருக்கும் திருமண வரன் பார்க்கும் இணையதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு  திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். 

இதையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் பெங்களூரு வந்த ராஷ்மி மற்றும் அவருடைய சகோதரி லட்சுமி  இருவரும் ரமேஷை சந்தித்துப் பேசியுள்ளனர். இதையடுத்து கடந்த செப்டம்பரில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இம்மாதம் 30 ஆம் தேதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது.  இதைத்தொடர்ந்து திருப்பதியில் திருமணம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டு, அங்கு வரும் உறவினர்கள் தங்குவதற்காக 70 அறைகள் முன்பதிவு செய்வதற்கென ரூ 1 லட்சம் முன்பணமாகக் கொடுக்கப்பட்டு, சமையல் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஆடைகள் மற்றும் பரிசுப்பொருட்கள் என 4 லட்சம் வரை செலவு செய்துள்ளனர். 

இதனிடையே திடீரென அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற ராஷ்மி, “எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. திருமணத்தை நிறுத்தி விடுங்கள்” எனக் கூறியுள்ளார்.  இதைக்கேட்டு மாப்பிள்ளை  வீட்டார் அதிர்ச்சியில் உறைய காரணம்  என்னவென்று கேட்க “உங்களுடைய மூக்கு பெரிதாக உள்ளது. அதனால் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை” எனக் கூறியுள்ளார். அப்போது மணமகன் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தனது மூக்கின் தோற்றத்தை மாற்றிக்கொள்வதாகக் கூறியுள்ளார். 

ஆனாலும் தனது முடிவில் உறுதியாக இருந்த ராஷ்மி,  ரமேஷ் உள்ளிட்ட அவரின் உறவினர்கள் போன் நம்பரையும் பிளாக் செய்துள்ளார். இதனால் மனமுடைந்த ரமேஷ், திருமணம் செய்துகொள்வதாக மோசடி செய்து ஏமாற்றிவிட்டதாக ராஷ்மி, லட்சுமி மற்றும் அவர்களுடைய தந்தை ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். என்னை போல் சிலரையும் அவர் ஏமாற்றி இருக்கலாம் என்று கூறி   நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம் ராஷ்மி, லட்சுமி மற்றும் அவர்களுடைய தந்தை ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.