×

ஆறாத ரணம்..அந்த 60 மணி நேரம்..

மும்பை அட்டாக்கின் 12ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் லக்ஷர் இ தொய்பா அமைப்பைச்சேர்ந்த பயங்கரவாதிகள் கடந்த 26.11.2020 அன்று தொடங்கி சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தாஜ் ஓட்டல், ஓபராய் டிரைடண்ட் ஓட்டல், யூத கலாச்சார மையம் என்று முப்பையை 60 மணி தங்களது பிடிக்குள் வைத்திருந்த பயங்கர தினத்தை இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகளும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிடமுடியாது. அஜ்மல் கசாப் உள்ளிட்ட பயங்கரவாதிகளின் கண்மூடித்தனமான
 

மும்பை அட்டாக்கின் 12ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் லக்‌ஷர் இ தொய்பா அமைப்பைச்சேர்ந்த பயங்கரவாதிகள் கடந்த 26.11.2020 அன்று தொடங்கி சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தாஜ் ஓட்டல், ஓபராய் டிரைடண்ட் ஓட்டல், யூத கலாச்சார மையம் என்று முப்பையை 60 மணி தங்களது பிடிக்குள் வைத்திருந்த பயங்கர தினத்தை இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகளும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிடமுடியாது.

அஜ்மல் கசாப் உள்ளிட்ட பயங்கரவாதிகளின் கண்மூடித்தனமான தாக்குதல்களில் கொத்து கொத்தாக அப்பாவிகள் செத்து விழுந்தனர். ஹேமந்த் கர்கரே, அசோக் காம்தே, விஜய் சலாஸ்கர் உள்ளிட்ட உயரதிகாரிகளும் கொல்லப்பட்டார்கள்.

பயங்கரவாதிகளின் பிடிக்குள் சிக்கி மும்பை கதறியதை நாடெங்கிலும் மக்கள் தொலைக்காட்சிகளில் கண்டு வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தனர்.

அந்த தாக்குகலில் பதிலடியில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுவிட்டாலும், உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப், 21.11.2012ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டான்.

மும்பை அட்டாக் நடந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இப்போதுதான் நடந்தது போலவே ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் ஆறாத ரணமாக இருக்கிறது அந்த 60 மணி நேரம்.

இந்தியர்கள் மட்டுமல்லாது உலக நாடுகளும் இந்த தினத்தில் உயிரிழந்த 166 பேருக்கும் அஞ்சலி செலுத்தி வருகின்றன.

மும்பை அட்டாக் தினத்தை இன்று இஸ்ரேலில் கடைப்பிடிக்கப்படுகிறது. இஸ்ரேல் நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு அனுசரிக்கப்படுகிறது