×

ஆம்னி பஸ் டிக்கெட் ரேட் கேட்டவருக்கு விழுந்த அடி! – திருச்சியில் நடந்த அநியாயம்

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்.சென்னையில் பணியாற்றி வரும் இவர், ஊருக்கு சென்றுவிட்டு கடந்த சனிக்கிழமை இரவு சென்னைக்கு திரும்புவதற்காக திருச்சி மத்திய பேருந்து நிலையம் வந்தார். அப்போது சென்னைக்கு ஆம்னி பஸ் புறப்பட தயாராக உள்ளது என்று ஒரு இடைத்தரகர் சத்தம்போட்டு அழைத்துக்கொண்டிருந்தார். திருச்சியில் ஆம்னி பஸ் டிக்கெட் விலை கேட்டுவிட்டு, டிக்கெட் வாங்காமல் சென்ற பயணிக்கு சரமாரி அடி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்.சென்னையில் பணியாற்றி வரும் இவர், ஊருக்கு
 

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்.சென்னையில் பணியாற்றி வரும் இவர், ஊருக்கு சென்றுவிட்டு கடந்த சனிக்கிழமை இரவு சென்னைக்கு திரும்புவதற்காக திருச்சி மத்திய பேருந்து நிலையம் வந்தார். அப்போது சென்னைக்கு ஆம்னி பஸ் புறப்பட தயாராக உள்ளது என்று ஒரு இடைத்தரகர் சத்தம்போட்டு அழைத்துக்கொண்டிருந்தார். 

திருச்சியில் ஆம்னி பஸ் டிக்கெட் விலை கேட்டுவிட்டு, டிக்கெட் வாங்காமல் சென்ற பயணிக்கு சரமாரி அடி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்.சென்னையில் பணியாற்றி வரும் இவர், ஊருக்கு சென்றுவிட்டு கடந்த சனிக்கிழமை இரவு சென்னைக்கு திரும்புவதற்காக திருச்சி மத்திய பேருந்து நிலையம் வந்தார். அப்போது சென்னைக்கு ஆம்னி பஸ் புறப்பட தயாராக உள்ளது என்று ஒரு இடைத்தரகர் சத்தம்போட்டு அழைத்துக்கொண்டிருந்தார். 

அவரிடம் சென்ற கார்த்திக், பஸ் டிக்கெட் எவ்வளவு என்று கேட்டுள்ளார். ஏ.சி பஸ் என்றால் ரூ.650, சாதாரண பஸ் என்றால் ரூ.400 என்று கூறியுள்ளார் இடைத்தரகர். இதனால், பதில் ஏதும் சொல்லாமல் அங்கிருந்து புறப்பட்டிருக்கிறார் கார்த்திக். ஆனால், டிக்கெட் வாங்காமல் சென்ற கார்த்திகை அந்த இடைத்தரகர் தாக்கினார். இதில் காயம் அடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
இது குறித்து கார்த்திக் கூறுகையில், “அரசு பஸ் கட்டணத்தை விட அதிகமாக இருந்ததால் அரசு பஸ்ஸிலேயே சென்றுவிடலாம் என்று நினைத்து அங்கிருந்து புறப்பட்டேன். அப்போது அந்த இடைத்தரகர் தகாத வார்த்தைகளால் என்னைத் திட்ட ஆரம்பித்தார். ஏன் ஆபாசமாக திட்டுகின்றீர்கள் என்று கேட்டபோது அடிக்க ஆரம்பித்தார். இதனால் புறக்காவல் மையத்துக்கு புகார் கொடுக்க சென்றேன். அருகில் இருந்தவர்களை போன் செய்து வரவழைத்த அந்த நபர் கூட்டமாக சேர்ந்து தாக்க ஆரம்பித்தார். சண்டையை விலக்கிவிடுவதாக நடித்த சில இடைத்தரர்களும் என்னைத் தாக்கினர். டிக்கெட் விலையைக் கேட்டது தவறா… விலை அதிகமாக இருக்கிறது என்று அரசு பஸ்ஸில் பயணம் செய்ய முடிவு செய்தது தவறா?” என்றார்.

தாக்குதல் தொடர்பாக கார்த்திக் திருச்சி கன்டோன்மெண்ட் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆம்னி பஸ் இடைத்தரகர்கள் பில்லா என்கிற ஶ்ரீரங்கன், வெங்கடேஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.