×

#BREAKING கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்ட இளைஞர் படுகொலை! சென்னையில் பரபரப்பு

 

சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்ட இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்ட 23 வயது இளைஞர் விஷ்ணு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்டதால் விஷ்ணுவை அம்மிக்கல் மற்றும் பீர் பாட்டிலால் அடித்து கொலை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளியை கைது செய்ய போலீசார் மெத்தனம் காட்டுவதாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும் கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே விஷ்ணு குடும்பத்துக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.