8 ஆண்டுகளாக உல்லாசம், திருமணம் செய்வதாக கூறி மதமாற்றம்! ரூ.13 லட்சத்தையும் அபகரித்து ஏமாற்றிய காதலன்
சென்னையில் பணத்தையும் கற்பையும் இழந்த அபலை பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் சுகன்யா என்ற ஷாபாஃமரியம்(34). பட்டதாரியான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு வேலைக்காக வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு வடபழனியில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் ஜவுளி மற்றும் லெதர் பேக் கடை நடத்தி வந்த சூளைமேட்டைச் சேர்ந்த சையது இப்ராஹிம் (32) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. ஒரு மாதத்திலேயே சுகன்யாவை காதலிப்பதாக கூறியுள்ளார். நீ இல்லை என்றால் மணிக்கட்டை வெட்டிக்கொண்டு இறந்து விடுவேன் என கூறியதாக தெரிய வருகிறது.
இதனால் மனமிறங்கிய இளம் பெண் சுகன்யா சையது இப்ராஹிமின் காதலை ஏற்றுக்கொண்டார். பிறகு சையது இப்ராஹிமின் வற்புறுத்தலின் பேரில் இஸ்லாமிய மதத்துக்கு மாறியதாக கூறப்படுகிறது. 2017 ஜூன் 1ம் தேதி முதல் தற்போது வரை காதலிப்பதாக கூறியும் மிக விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என நம்பும்படி பேசி வந்துள்ளார். 2019 ஆம் ஆண்டு OMRல் உள்ள வணிக வளாகத்தில் ஜவுளி& லெதர் பேக் கடை திறந்துள்ளார். மாதம் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம், தங்குமிடம் உணவு ஏற்பாடு செய்து தருகிறேன் என சையது இப்ராஹிம் கூறியுள்ளார். இதனால் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளம்பெண் சுகன்யா தன்னுடைய வேலையை விட்டுவிட்டு சையது இப்ராஹிம் துவங்கிய ஜவுளிக்கடையில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். வேலைக்கு சேர்ந்த முதல் மாதத்திலேயே நாம் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறோமே .. உனக்கு எதற்கு சம்பளம்..? நான் சம்பாதிப்பதெல்லாம் உனக்கு தானே... என செண்டிமெண்டாக பேசி நம்ப வைத்துள்ளார்.. கடந்த 2020 முதல் 2023 வரை சென்னை OMRல் ஏகாட்டூரில் தனியார் விடுதியில் சுகன்யா தங்கி் இருந்துள்ளார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் சாப்பாடு கொடுக்க வருவது போல், சுகன்யாவின் அறையிலேயே சையது இப்ராஹிம் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இளம் பெண் தங்கியிருந்த Hostel fees மற்றும் உணவுக்கு மட்டும் சையது இப்ராஹிம் பணம் செலுத்தி வந்துள்ளார். இதற்கிடையில் சுற்றுலா என்ற பெயரில் இருவரும் பல ஊர்களுக்கு சென்று ஜாலியாக இருந்துள்ளனர். மிக விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என சையது இப்ராஹிம் 8 ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வந்துள்ளார். புதிய தொழில் தொடங்குவதாக கூறி சுகன்யாவிடம் இருந்த 13 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் சையது இப்ராஹிம் வாங்கியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு சுகன்யாவின் பெற்றோரை தொடர்பு கொண்டு அவரை திருமணம் செய்து கொள்வதாக சையத் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். அன்றிலிருந்து சுகன்யாவை தொடர்பு கொள்வதை பெற்றோர் நிறுத்திவிட்டனர்.
இந்த நிலையில் சையது இப்ராஹிம் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போவதாக கடந்த 2025 ஆம் ஆண்டு சுகன்யாவுக்கு தெரியவந்துள்ளது. இது பற்றி சையது இப்ராஹிமிடம் கேட்ட போது 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்து கொள்ளலாம் எனக்கூறி நம்ப வைத்துள்ளார். ஆனால் 2025 டிசம்பர் மாதமே வேறொரு பெண்ணுடன் சையது இப்ராஹிமுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது சுகன்யாவுக்கு தெரிய வந்தது. உன்னையே நம்பி வந்த என்னை ஏமாற்றி விட்டாயே என கேட்டபோது, வரும் மே 20 ஆம் தேதி எனக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற உள்ளது. உன்னால் முடிந்ததை பார்.. என ஏளனமாக சையது இப்ராஹிம் பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 6ம் தேதி அரும்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் சுகன்யா என்கிற ஷாபாஃ மரியம் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் FiR பதிவு செய்து கேளம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்துக்கு இந்த வழக்கை மாற்றி உள்ளனர். இந்த நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையரகத்துக்கு வழக்கறிஞருடன் வந்த இளம் பெண் சுகன்யா, தனக்கு நீதி கிடைக்க வேண்டுமென மனு கொடுத்துள்ளார். வரும் 20ம் தேதி வேறொரு பெண்ணுடன் சையது இப்ராஹிமுக்கு நடக்க இருக்கும் திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.