×

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் இளைஞரின் மர்ம உறுப்பை துண்டித்து கொடூர கொலை

 

ஒட்டன்சத்திரம் அருகே ஓரினசேர்க்கைக்கு மறுத்ததால் இளைஞரின் மர்ம உறுப்பை துண்டித்து கொடூரமாக கொலை செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


 
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கே.அத்திக்ககோம்பை பகுதியைச் சேர்ந்த இளைஞர் பெருமாள் (25) இவர் அதே பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஹாலோ பிளாக் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 30-ஆம் தேதி இரவு சம்பளம் வாங்கி வருவதாக வீட்டில் கூறி விட்டு வெளியே சென்ற இளைஞர் அதிகாலை வரை வீட்டிற்கு வரவில்லை. அதன்பின் இடையகோட்டை காவல்துறையினர் மூலம் இளைஞர் ஒருவர் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஜவ்வாதுபட்டி நங்காஞ்சி ஆற்றில் மர்ம உறுப்பு துண்டித்து  கொடூரமாக  கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் இடையகோட்டை காவல்துறையினர் உடலை மீட்டு திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி விட்டு தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பெருமாளுடன்  பணியாற்றும் சக ஊழியரான இடையகோட்டை பாறையூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் (22) என்பவரும்,பெருமாளும் அடிக்கடி ஒரீன சேர்க்கையில் ஈடுபட்டு வந்ததும்,கொலை நடந்த அன்று இருவரும்  இடைகோட்டையில் உள்ள அணைப் பகுதிக்குச் சென்று மது அருந்தியுள்ளனர். அதன் பின் இருவரும் அதிக மது போதையில் ஓரினச்சேர்க்கையின் ஈடுபட்டுள்ளனர். அப்போது  ஸ்ரீதரின் மர்ம உறுப்பை பெருமாள் கடித்து காய படுத்தியுள்ளார். இதனால்  கோபத்தில் ஸ்ரீதர்,பெருமாளை  கீழே தள்ளி தலையில்  கல்லைத் தூக்கிப் போட்டும்  கொலை செய்துள்ளார். பின்னர் பெருமாளின் மர்ம உறுப்பை துண்டித்து  தண்ணீரில் மூழ்கடித்து அவர் தலையின் மேல் கல்லை தூக்கி வைத்துவிட்டு சென்றதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இளைஞரின் மர்ம உறுப்பை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டன்சத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.