×

“ஆசைய தூண்டி விட்டுட்டு ஆட்டைய போட்டுட்டானுங்களே” -புலம்பும் பெங்களூரு பெண்

ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த பெண்ணிடம் 50000 ரூபாய் மோசடி செய்த நிறுவனத்தை போலீசார் தேடி வருகிறார்கள் கர்நாடகாவின் பெங்களூருவில் வசிக்கும் 58 வயதான சவிதா சர்மா வீட்டில் சமைக்க மாட்டார்.அவர் எப்போதும் ஆன்லைனில் உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கமுள்ளவர் . அதனால் பேஸ்புக்கில் வரும் விதவிதமான உணவு வகைகளை தன்னுடைய கார்டு மூலம் பணம் கட்டி வீட்டிற்கு உணவை வரவைத்து சாப்பிடுவார் .அதன்படி அவர் சமீபத்தில் சமூக ஊடகத்தில் ஒரு விளம்பரத்தை பார்த்தார்
 

ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த பெண்ணிடம் 50000 ரூபாய் மோசடி செய்த நிறுவனத்தை போலீசார் தேடி வருகிறார்கள்

கர்நாடகாவின் பெங்களூருவில் வசிக்கும் 58 வயதான சவிதா சர்மா வீட்டில் சமைக்க மாட்டார்.அவர் எப்போதும் ஆன்லைனில் உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கமுள்ளவர் .


அதனால் பேஸ்புக்கில் வரும் விதவிதமான உணவு வகைகளை தன்னுடைய கார்டு மூலம் பணம் கட்டி வீட்டிற்கு உணவை வரவைத்து சாப்பிடுவார் .அதன்படி அவர் சமீபத்தில் சமூக ஊடகத்தில் ஒரு விளம்பரத்தை பார்த்தார் .அந்த விளம்பரத்தில் 250 ரூபாய்க்கு ‘ஒரு சாப்பாடு வாங்கினால் ஒரு சாப்பாடு இலவசம்’ என குறிப்பிடப்பட்டிருந்தது .அதை பார்த்ததும் அந்த பெண்ணுக்கு அந்த இலவச உணவை வாங்க வேண்டும் என்று ஆசை பிறந்தது ,அதனால் அதில் குறிப்பிடப்பட்ட போன் நபருக்கு போன் செய்தார் .
பின்னர் அவர்கள் கூறியபடி அவர்களின் வெப் சைட்டில் இருக்கும் படிவத்தில் தன்னுடைய முகவரி மற்றும் க்ரெடிட் கார்டு, பின் நம்பர் போன்ற விவரங்களை நிரப்பி அவர்களுக்கு அனுப்பி வைத்தார் .அதன் பிறகு அவரின் கார்டிலிருந்து 49996 ரூபாய் எடுக்கப்பட்டதாக அவருக்கு ஒரு மெசேஜ் வந்தது.அந்த மெஸேஜை பார்த்து அதிர்ந்த அந்த பெண் அந்த ஹொட்டல் நம்பருக்கு போன் செய்தார். அப்போது அந்த நம்பர் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார் .
அதனால் அந்த பெண் சைபர் கிரைம் போலீசில் அந்த நிறுவனத்தின் மீது புகாரளித்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .