×

“முதலில் படுக்க சொல்வார் ,அப்புறம் நகையை எடுத்து செல்வார்” – மூன்று மாதத்தில் மூன்று பேரை ஏமாற்றிய பெண்.

ஒரு இளம் பெண் கடுமையான நிதி நெருக்கடியில் இருந்ததால் ,அவர் பலரை ஏமாற்றி 3 மாதங்களில் 3 திருமணங்கள் செய்து கொண்டு அவர்களிடமிருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். மஹாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்த முகுந்த்வாடி பகுதியில் குடியிருக்கும் விஜயா அம்ருத் என்ற 27 வயது பெண் பலரை திருமணம் செய்து ஏமாற்றிய வழக்கில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார் . அவுரங்காபாத்தை சேர்ந்த விஜயா அம்ருத் இந்த ஊரடங்கு நேரத்தில் கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தார் .அதனால் அவர்
 

ஒரு இளம் பெண் கடுமையான நிதி நெருக்கடியில் இருந்ததால் ,அவர் பலரை ஏமாற்றி 3 மாதங்களில் 3 திருமணங்கள் செய்து கொண்டு அவர்களிடமிருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். 

மஹாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்த முகுந்த்வாடி பகுதியில் குடியிருக்கும்  விஜயா அம்ருத் என்ற 27 வயது பெண் பலரை திருமணம் செய்து ஏமாற்றிய வழக்கில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார் .

அவுரங்காபாத்தை சேர்ந்த விஜயா அம்ருத் இந்த ஊரடங்கு நேரத்தில் கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தார் .அதனால் அவர் குறுக்கு வழியில் பலரை திருமணம் செய்து ஏமாற்றி பணம் சம்பாதிக்க திட்டம் தீட்டினார் .

அவர் முதலில் சினார், நாசிக் நகரைச் சேர்ந்த யோகேஷ் ஷிர்சாத் என்பவரை  திருமணம் செய்து கொண்டார் .அந்த திருமணம் முடிந்து பதினைந்து நாட்களுக்குப் பிறகு, அவர் வீட்டிலிருந்த  விலைமதிப்பற்ற பொருட்களுடன் தப்பி ஓடிவிட்டதாக அவர் மீது அவரின் கணவர் புகார் கொடுத்தார் .

. அதன் பின்னர் அவர் ரோகாட்டின் கர்ஜாட்டில் வசிக்கும் சந்தீப் தாரடே என்பவரை மணந்தார். இதற்குப் பிறகு, அவர் மேற்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவரை மணந்து அவரையும் ஏமாற்றினார்.

முதல் கணவர் ஷிர்சாத் அம்ருட்டைத் தேட முயன்றதும், அவள் வேறொருவரை மணந்து அவருடைய வீட்டிலிருந்து நகை மற்றும் விலையுயர்ந்த  பொருட்களுடன் தப்பி ஓடியதும் கண்டுபிடிக்கப்பட்டது . பின்னர்  அவரது முதல் கணவரின் புகாரின் அடிப்படையில், போலீசார் ஒரு விசாரணையைத் தொடங்கினர் .அப்போது  3 மாதங்களில் 3 திருமணங்கள்  செய்த  அமுருட் கைது செய்யப்பட்டார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்