×

மேலூர் அருகே வீட்டு வேலைக்கு சென்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை- சிறுவன் உட்பட 5 பேர் கைது

 

மதுரை மேலூர் அருகே வீட்டு வேலைக்கு வந்த பெண்ணை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக 18 வயது சிறுவன் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தாமரைப்பட்டிக்கு விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள கிராமத்திலிருந்து பெண் (33) ஒருவர் கூலி வேலை தேடி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மகள் ஒரு மகள் உண்டு. கணவன் கைவிட்ட நிலையில் பொருளாதார சிரமம் ஏற்பட்டு வேலை கிடைத்தாக வேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் வேலை தேடுவதை தெரிந்து கொண்ட பக்கத்து வீட்டில் இருந்த TVK கட்சிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஆதரவு சேகரித்த அனிதா என்ற பெண் தான் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்டை வீட்டு அனிதா ஒரு செல்போன் எண்ணைக் கொடுத்து, “மேலூரில் முதியவரை மூதாட்டியை பராமரிக்க ஆள் தேவை” என்று சொன்னார். அந்த எண்ணில் பேசிய நபர், மேலூருக்கு வரச் சொல்லி பணம் தருவதாக உறுதியளித்தார். 

இதனை நம்பி அந்த பெண் ஜூலை 8 இரவு மேலூருக்கு வந்தார். ஒரு 20 வயது இளைஞன் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று, தாமரைப்பட்டி கண்மாய் அருகே டாஸ்மாக் கடைக்கு அருகில், ஆள் நடமாட்டம் குறைவான இடத்திற்கு கொண்டு போனார். அங்கு 18 வயது சிறுவன் உள்பட 4 பேர் ஏற்கனவே காத்திருந்தனர். பெண் சந்தேகப்பட்டு கேட்டபோது, அந்த இளைஞன் அவளை இறக்கிவிட்டு சென்றுவிட்டார். மீதமுள்ள 4 பேர் அச்சுறுத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அவர்கள் அரை பவுன் தங்கச் சங்கிலி. வெள்ளிக் கொலுசு, செல்போன் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர். பாதிக்கப்பட்ட பெண் மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் 18 வயது சிறுவன் உள்பட ஐந்து நபர்களையும் சுற்றி வளைத்து மகளிர் காவல்துறை கைது செய்தனர்.