×

நிலத் தகராறில் மிளகாய் பொடியை தூவி பெண் வெட்டிக்கொலை

ஆந்திரா ஆந்திர மாநிலம் சித்தூரில் நிலத் தகராறில் மிளகாய் பொடியை தூவி பெண் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சித்தூர் மாவட்டம், வெதுருகுப்பம் மண்டலம் மேல் கனிகாபுரத்தை சேர்ந்தவர் நாராயண ரெட்டி. விவசாயியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விஜயசேகர ரெட்டி என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாராயண ரெட்டி, தனது மனைவி பத்மாவதியம்மா மற்றும் மகனுடன் சேர்ந்து, விஜயசேகர
 

ஆந்திரா

ஆந்திர மாநிலம் சித்தூரில் நிலத் தகராறில் மிளகாய் பொடியை தூவி பெண் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சித்தூர் மாவட்டம், வெதுருகுப்பம் மண்டலம் மேல் கனிகாபுரத்தை சேர்ந்தவர் நாராயண ரெட்டி. விவசாயியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விஜயசேகர ரெட்டி என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாராயண ரெட்டி, தனது மனைவி பத்மாவதியம்மா மற்றும் மகனுடன் சேர்ந்து, விஜயசேகர ரெட்டியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த விஜயசேகர ரெட்டியை, அவர்கள் மூவரும் சூழ்ந்துகொண்டு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விஜயசேகர ரெட்டியின் மனைவி சந்திரகலா அவர்களை தடுக்க முயன்றார். அப்போது, ​சந்திரகலா மீது மிளகாய் பொடியை தூவி நாராயணரெட்டி குடும்பத்தினர் சராமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் பலத்த காயமடைந்த சந்திரலேகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வெதுருகுப்பம் போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து நாராயணரெட்டி குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.