×

டிக் டோக் மோகம் ! கணவர் கண்டித்ததால் மனைவி, மகன் சயனைடு குடித்து தற்கொலை !

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் டிக்டோக்கில் மூழ்கியிருந்ததை கணவர் கண்டித்ததால் மனைவி மற்றும் மகன் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே ஒய்.எஸ்.ஆர். காலனியில் வசித்து வந்தவர் ஷேக் கரீமா. அவருக்கு வயது 35. அவருக்கு 16 வயதில் மகன் உள்ளார். கரீமாவுக்கு டிக்டோக்கில் அதிக நேரம் செலவிடுவது பிடிக்கும். ஏற்கனவே ஊரடங்கு காரணமாக வேலையிழந்த கணவர் ஷேக் சம்சுதீன் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். டிக்டோக்கில் அடிமையாக இருக்க வேண்டாம்
 

 

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் டிக்டோக்கில் மூழ்கியிருந்ததை கணவர் கண்டித்ததால் மனைவி மற்றும் மகன் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே ஒய்.எஸ்.ஆர். காலனியில் வசித்து வந்தவர் ஷேக் கரீமா. அவருக்கு வயது 35. அவருக்கு 16 வயதில் மகன் உள்ளார்.
கரீமாவுக்கு டிக்டோக்கில் அதிக நேரம் செலவிடுவது பிடிக்கும். ஏற்கனவே ஊரடங்கு காரணமாக வேலையிழந்த கணவர் ஷேக் சம்சுதீன் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். டிக்டோக்கில் அடிமையாக இருக்க வேண்டாம் என கணவர் சம்சுதீன் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. தங்க பாலிஷ் செய்து வந்த சம்சுதீன் ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த கார் விபத்தில் சாம்ஷுதீன் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் செலவாகிவிட்டது. அந்த கடனை திருப்பி செலுத்தமுடியவில்லை. ஊரடங்கு காரணமாக நகைக் கடைகள் திறக்கவில்லை என்பதால் சம்சுதீன் தனது வேலையை இழந்துள்ளார்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் டிக்டோக் வீடியோக்களை தயாரிப்பதில் கரிமா ஆர்வமாக இருந்துள்ளார். டிக்டோக்கில் திரைப்படக் காட்சிகளை பார்த்து ரசித்து, தன்னையும் அதில் ஒரு கதாபாத்திரமாக ஆகிவிட்டார் கரீமா. இதனால் நேற்று இரவு கணவர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கரீமா தங்கத்தை மெருகூட்டுவதற்காக வைத்திருந்த பாட்டிலில் இருந்த சயனைடு எடுத்து குடித்து விட்டார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துவிட்டார் கரீமா. தாய் இறந்துவிட்டதை பார்த்த 16 வயது மகன் வேதனையில தானும் பாட்டிலில் மீதமுள்ள சயனைடை குடித்துவிட்டார். இதனால் அவரும் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இரு உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வழக்கு பதிவு செய்யப்பட்டது