×

வெளிநாடு சென்ற புதுமாப்பிள்ளை- 48 சவரன் நகையுடன் ஜிம் மாஸ்டரோடு ஓடிப்போன மனைவி
 

 

நகை, பணம் எடுத்து கொண்டு ஜிம்மில் பழக்கமான வாலிபருடன் பெண் ஓடிய சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி அடுத்த ஐகுந்த கொத்தப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பஷீர் – ஜீனத் தம்பதியினர். இவர்களது மகன் தில்பாஷா. தில்பாஷா கடந்த 2009ம் ஆண்டு குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்று அங்கு டிரைவர் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குவைத்தில் இருந்து விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளார். அதுசமயம், தில்பாஷாவின் தந்தையான பஷீர் மாரடைப்பால் இறந்துவிட, அந்த இறப்பு நிகழ்ச்சிக்கு தில்பாஷாவின் சொந்த சித்தியான ஷகீலா என்பவரின் மகள் சபூரா வரவே அவருக்கும், தில்பாஷாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வீட்டிற்கு தெரிந்தே இருவரும் பழகி வந்துள்ளனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள இரு வீட்டாரும் சம்மதமும் தெரிவித்துள்ளனர். 

இதனையெடுத்து மீண்டும் வேலைக்காக தில்பாஷா குவைத்திற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் இரு வீட்டாரும் சேர்ந்து கடந்த 2019ம் ஆண்டு கிருஷ்ணகிரியில் உள்ள சுன்னத் வல் ஜமாத்தில் திருமணம் பதிவு செய்யப்பட்டு தில்பாஷா குடும்பம் சார்பில் 48 சவரன் தங்க நகைகள் சபூராவிற்கு வரதட்சணையாக போட்டு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஒரு மாதம் குடும்பம் நடத்திய நிலையில் சபூரா கர்ப்பமானார். மருத்துவ பரிசோதனையில் மனைவி கர்ப்பத்தை உறுதி செய்துவிட்டு தில்பாஷா, 2019 மே 24ம் தேதி மீண்டும் குவைத்திக்கு வேலைக்காக சென்று விட்டார். 3 மாதத்திற்கு பின் கரு கலைந்து விட்டதாக தில்பாஷாவிற்கு சபூரா தெரிவித்துள்ளார். கரு கலைந்ததால் மன வேதனையில் வீட்டிலேயே இருந்த சபூரா, தான் காவல்துறையில் எஸ்.ஐ. வேலைக்கு செல்ல வேண்டும். அதனால் ஜிம்முக்கு சென்று உடலை தேற்ற வேண்டும் எனக்கூறி ஜிம்முக்கு சென்றுள்ளார். அப்போது அந்த ஜிம்மில் கிருஷ்ணகிரி நியூ அவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த லியாகத் என்பவரின் மகன் ஐசியத் அலி என்பவருடன் சபூராவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறி இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. 

குவைத்திற்கு சென்ற கணவர் தில்பாஷா 2020ம் ஆண்டு குவைத்தில் இருந்து வந்துள்ளார். பின்னரும் சபூரா மீண்டும் கர்ப்பமானதை உறுதி செய்து விட்டு குவைத்திற்கு சென்றுள்ளார். இந்த முறையும் கரு கலைந்ததாக தில்பாஷா கூறியிருக்கிறார். இதில் சந்தேகம் அடைந்த தில்பாஷா குவைத்தில் இருந்து வந்து சம்பந்தப்பட்ட  மருத்துவமனைகளுக்கு சென்று விசாரித்துள்ளார். என் மீதே சந்தேகப்படுகிறாயா என சபூராவிற்கும், தில்பாஷாவிற்கும் தகராறு ஏற்ப்பட்டு இரு குடும்பத்தின் பிரச்சினையாக மாறியுள்ளது. இதனால் கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் சபூரா தரப்பில் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் தன்னுடைய கணவர் தில்பாஷாவிற்கு ஆண்மை குறைபாடு உள்ளதால் எனக்கும் எனது கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது எனக்கூறி விவகாரத்து கேட்டுள்ளார். வழக்கானது நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் போதே தனது ஜிம் காதலனான ஐசியத் அலியை, சபூரா திருமணம் செய்து கொண்டார்.   இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தில்பாஷா, தன்னை ஏமாற்றி தன்னிடம் இருந்து எடுத்து சென்ற, 48 சவரன் நகை, குவைத்தில் சம்பாதித்து அனுப்பிய 45 லட்ச ரூபாய் பணம், இரண்டரை கிலோ வெள்ளி, பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்டவற்ற மீட்டு தர வேண்டும் என பாதிக்கப்பட்ட தில்பாஷா மற்றும் அவரது குடும்பத்தினர் கிருஷ்ணகிரி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.