கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொடூரமாக கொன்ற மனைவி
திருத்துறைப்பூண்டி அருகே கள்ளக்காதலனுடன் இணைந்து கணவனை கொலை செய்து நாடகமாடிய மனைவி மற்றும் கள்ளக்காதலன் இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பிப்ரவரி இரண்டாம் தேதி கீராந்தி பகுதியில் உள்ள வடிவாய்க்கால் பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ரத்த காயங்களுடன் போலீசார் மீட்டனர். விசாரணையில் அவர், பொன்னிரை பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பது தெரியவந்தது. இந்த நிலையில் அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததால் போலீசார் இது கொலையாக இருக்கலாம் என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இறந்த சுப்பிரமணியனின் இரண்டாவது மனைவி இந்திராவுக்கும், புஞ்சையூர் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (63)இருவருக்கும் தவறான பழக்க வழக்கம் இருந்துள்ளது. இது சுப்பிரமணியனுக்கு தெரியவரவே, சந்திரசேகரன் சுப்ரமணியனை கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது
இதற்கு உடந்தையாக இருந்த இறந்த சுப்பிரமணியனின் இரண்டாவது மனைவி இந்திரா மற்றும் சந்திரசேகர் இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலனுடன் இணைந்து கணவரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .