×

விகாஸ் துபேவின் என்கவுன்ட்டர் ரியலா ?ரீலா ?-கேங்ஸ்டர் என்கவுன்டரில் எதிர்க்கட்சிகள் கேட்கும் ஐந்து சந்தேகங்கள் ..

உ.பி.யில் கான்பூரில் எட்டு போலீசை சுட்டுக்கொன்ற கேங்ஸ்டர் விகாஸ் துபே இன்று போலீஸ் பாதுகாப்பிலிருந்து தப்பியோடிய போது என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார் . இவரின் இந்த என்கவுன்டரில் அரசியல்வாதிகளும் .பொதுமக்களும் ஐந்து சந்தேகங்களை எழுப்பியுள்ளனர் . 1.போலீஸ் அறிக்கையில் விகாஸ் துபே தப்பியோடினார் அப்போது சுட்டோமென்கிறார்கள் . டவுட் 1: ஒருவர் தப்பியோடும்போது எப்படி அவ்வளவு துல்லியமாக அவரின் நெஞ்சில் நான்கு குண்டுகள் பாய முடியும் ? 2.துபே வயல்வெளியில் தப்பி ஓடினார் என்று போலீஸ் அறிக்கை கூறுகிறது
 

உ.பி.யில் கான்பூரில் எட்டு போலீசை சுட்டுக்கொன்ற கேங்ஸ்டர் விகாஸ் துபே இன்று போலீஸ் பாதுகாப்பிலிருந்து தப்பியோடிய போது என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார் .
இவரின் இந்த என்கவுன்டரில் அரசியல்வாதிகளும் .பொதுமக்களும் ஐந்து சந்தேகங்களை எழுப்பியுள்ளனர் .
1.போலீஸ் அறிக்கையில் விகாஸ் துபே தப்பியோடினார் அப்போது சுட்டோமென்கிறார்கள் .
டவுட் 1: ஒருவர் தப்பியோடும்போது எப்படி அவ்வளவு துல்லியமாக அவரின் நெஞ்சில் நான்கு குண்டுகள் பாய முடியும் ?

2.துபே வயல்வெளியில் தப்பி ஓடினார் என்று போலீஸ் அறிக்கை கூறுகிறது .
டவுட்- 2:சிலநாட்களுக்கு முன்பு ரௌடிகளின் காலில் இரும்பு கம்பிகள் உள்ளேயிருப்பதாக கூறப்பட்டது .கால்களில் இரும்பு கம்பி இருக்கும்போது எப்படி ஒருவர் தப்பித்து வயல்வெளியில் ஓடமுடியும் ?
3.போலீஸ் அறிக்கையில் துபே காவலரிடமிருந்து ஆயுதத்தை பறித்துக்கொண்டு தப்பினார் என்றுள்ளது

டவுட் 3:விதி முறையின்படி, காவலில் உள்ள ஒரு நபர் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்படும்போது அவருக்கு கைவிலங்கு போட வேண்டும். எனவே, கைவிலங்கிட்ட துபே , போலீசிமிருந்து ஆயுதத்தை எவ்வாறு பறித்தார்? அவருக்கு கைவிலங்கு போட வில்லை என்றால், ஏன் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை?
4. துபே எஸ்.டி.எஃப் போலீஸ் வாகனத்தை விட்டு ஓடிவிட்டார் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

டவுட் 4:வியாழக்கிழமை மாலை உஜ்ஜைனிலிருந்து போலீஸ் வாகனம் கான்பூருக்கு தனது பயணத்தைத் தொடங்கியபோது, ​​துபே டாடா சஃபாரி காரில் அமர்ந்திருந்தார் .ஆனால் கவிழ்ந்த வாகனம் ஒரு டியூவி -300 எஸ்யூவி கார். அவரது வாகனம் ஏன் மாற்றப்பட்டது?

5.டவுட் 5:துபேயுடன் வந்த போலீசார் மப்டி உடையில் இருந்ததை சி.சி.டி.வி காட்சிகள் காட்டுகின்றன. ஆனால் பின்னர் விபத்தில் காயமடைந்த போலீசார், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது காக்கி சீருடையில் காணப்பட்டது எப்படி ?
இப்படியாக மக்களும் ,எதிர்க்கட்சிகளும் விகாஸ் துபேவின் என்கவுன்டரில் இருக்கும் சந்தேகங்களை எழுப்பியுள்ளார்கள் .இதற்கு அரசு நல்ல பதிலை தருமென்று எதிர்பார்க்கலாம் .