×

சென்னை விமான நிலையத்தில் அமெரிக்கா டாலர் பறிமுதல்

கொரொனா தொற்று அதிகரித்து வரும் இந்தச் சூழலைக் கடத்தல் காரர்களும் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள். சென்னை விமான நிலையத்தில் ஓரிரு மாதங்களாக தங்கம், கரன்சி கடத்தப்படுவது தடுக்கப்படுகிறது. சமீபத்தில் இது அதிகரித்திருக்கிறது. இந்தியாவிலிருந்து வெளிநாட்டு பணம் கடத்தப்படுவதாக சுங்கத்துறையினருக்கு முக்கியமான தகவல் கிடைத்தது. அதனால் உஷாரான சுங்கத்துரையினர், சென்னையில் இருந்து துபாய் செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஃபிளைட் ஐஎக்ஸ் 1643 விமானத்தில் பயணம் செய்யவிருந்த சென்னையைச் சேர்ந்த சையது அலி (26) என்பவரை புறப்பாடு முனையத்தில் விமான
 

கொரொனா தொற்று அதிகரித்து வரும் இந்தச் சூழலைக் கடத்தல் காரர்களும் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள். சென்னை விமான நிலையத்தில் ஓரிரு மாதங்களாக தங்கம், கரன்சி கடத்தப்படுவது தடுக்கப்படுகிறது. சமீபத்தில் இது அதிகரித்திருக்கிறது.

இந்தியாவிலிருந்து வெளிநாட்டு பணம் கடத்தப்படுவதாக சுங்கத்துறையினருக்கு முக்கியமான தகவல் கிடைத்தது. அதனால் உஷாரான சுங்கத்துரையினர், சென்னையில் இருந்து துபாய் செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஃபிளைட் ஐஎக்ஸ் 1643 விமானத்தில் பயணம் செய்யவிருந்த சென்னையைச் சேர்ந்த சையது அலி (26) என்பவரை புறப்பாடு முனையத்தில் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தினர்.


பிடிபட்ட சையது அலியைச் சோதனை செய்ததில், அவரது உள்ளாடையில் 3 பொட்டலங்கள் மறைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பொட்டலங்களைப் பிரித்து பார்க்கையில் 15600 அமெரிக்க டாலர்கள் இருந்தன. அதனை உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவரது கைப்பையில் இருந்து கைப்பற்றப்பட்ட சிகரெட் பாக்கெட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3000 அமெரிக்க டாலர்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் ரூபாய் 13.7 லட்சம் மதிப்பிலான 100 அமெரிக்க டாலர் நோட்டுக்களாக 18600 அமெரிக்க டாலர்கள் சுங்கச் சட்டம் 1962ன் கீழ் அந்த நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டன.