×

ஆன்லைன் வகுப்புகளில் அட்டகாசம் செய்யும் ஹேக்கர்கள்… மாணவர்கள் மத்தியில் ஆபாச படங்களை பகிரும் பயங்கரம்!

கொரோனா வைரஸ் பரவலால் பள்ளிகள் திறக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆன்லைன் என்ற புதிய யுக்தியைக் கையிலெடுத்துள்ளது பள்ளி நிர்வாகங்கள். ஆனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் ஆன்லைன் வகுப்புகளின் போது ஒரு புதிய சவாலை எதிர்கொள்கின்றனர். ஹேக்கர்கள் ஆன்லைன் பாட வகுப்புகளைக் குறிவைத்து அதில் ஆபாச படங்களை உள்ளீடு செய்கிறார்கள். தகவலின்படி, மும்பையில் ஆன்லைன் வகுப்புகள் ஹேக்கிங் செய்யப்பட்ட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளன. 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 9 ஆம் வகுப்பு மாணவர்களின் ஆன்லைன்
 

கொரோனா வைரஸ் பரவலால் பள்ளிகள் திறக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆன்லைன் என்ற புதிய யுக்தியைக் கையிலெடுத்துள்ளது பள்ளி நிர்வாகங்கள்.
ஆனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் ஆன்லைன் வகுப்புகளின் போது ஒரு புதிய சவாலை எதிர்கொள்கின்றனர். ஹேக்கர்கள் ஆன்லைன் பாட வகுப்புகளைக் குறிவைத்து அதில் ஆபாச படங்களை உள்ளீடு செய்கிறார்கள்.

தகவலின்படி, மும்பையில் ஆன்லைன் வகுப்புகள் ஹேக்கிங் செய்யப்பட்ட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளன. 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 9 ஆம் வகுப்பு மாணவர்களின் ஆன்லைன் வகுப்பில் உள்நுழைந்து ஆபாச படங்களை வெளியிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதே போன்ற மற்றொரு சம்பவத்தில் வழக்கில், அடையாளம் தெரியாத நபர் ஒரு ஆன்லைன் வகுப்பில் ஆபாச படங்களை உள்ளிட்டதால், சில நாட்களுக்கு பள்ளி ஆன்லைன் வகுப்புகளை நிறுத்தியுள்ளது.

“ஒவ்வொரு பாடத்திற்குமான ஆன்லைன் வகுப்பு லிங்க் மற்றும் பாஸ்வேர்டை முந்தைய இரவு தான் அனுப்புவார். இருப்பினும், அடையாளம் தெரியாத நபர்களும் அதில் உள்நுழைந்து விடுகின்றனர். மேலும் அவர்கள் மாணவர்கள் கற்கும் இடங்களில்ஆபாச வீடியோக்களை வெளியிடுவது மட்டுமில்லாமல் மோசமான வார்த்தைகளையும் பயன்படுத்துகின்றனர். இது சில நாட்களுக்கு தொடர்ந்து வருகிறது” என்று ஒரு மாணவனின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளார்.