×

பறிபோன வேலை… தூக்கில் தொங்கிய கணவன்… அதிகாலையில் அலறிய மனைவி!- ஊரடங்கில் நடந்த சோகம்

ஊரடங்கால் வேலையை இறந்த கணவர், குடித்துவிட்டு தினந்தோறும் மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். வேலை பறிபோன வேதனையில் வீட்டில் தற்கொலை செய்துக் கொண்டார். சென்னை புழல் கதிர்வேடு, பாரதியார் தெருவில் குடியிருந்து வந்தவர் காமராஜ் (45). இவரது மனைவி மலர்கொடி (38). இந்தத் தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் ஊரடங்கு காரணமாக காமராஜிக்கு கடந்த 3 மாதங்களாக வேலை இல்லை. அதனால் வீட்டிலேயே இருந்துள்ளார். மதுஅருந்திவிட்டு வீட்டுக்கு வரும் காமராஜ், மனைவி மற்றும் குழந்தைகளை அடிப்பதை வாடிக்கையாக
 

ஊரடங்கால் வேலையை இறந்த கணவர், குடித்துவிட்டு தினந்தோறும் மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். வேலை பறிபோன வேதனையில் வீட்டில் தற்கொலை செய்துக் கொண்டார்.

சென்னை புழல் கதிர்வேடு, பாரதியார் தெருவில் குடியிருந்து வந்தவர் காமராஜ் (45). இவரது மனைவி மலர்கொடி (38). இந்தத் தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் ஊரடங்கு காரணமாக காமராஜிக்கு கடந்த 3 மாதங்களாக வேலை இல்லை. அதனால் வீட்டிலேயே இருந்துள்ளார். மதுஅருந்திவிட்டு வீட்டுக்கு வரும் காமராஜ், மனைவி மற்றும் குழந்தைகளை அடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்தச் சமயத்தில் நேற்று அதிகாலையில் காமராஜ், சமையலறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன்பின்னர் கண்விழித்த மலர்கொடி, கணவர் தூக்கில் தொங்குவதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு மூத்த மகன் கண்விழித்துள்ளார். பின்னர் மலர்கொடியும் அவரின் மூத்த மகனும் சேர்ந்து தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த காமராஜை கீழே இறக்கியுள்ளனர். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு காமராஜை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து காமராஜ், இறப்பு குறித்து புழல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், காமராஜின் சடலத்தை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனைக்குப்பிறகு அவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக புழல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.