×

வெளிநாட்டு கரன்ஸியைக் கடத்திய இரு பெண்கள்

கடத்தல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிலும் வெளிநாட்டிலிருந்து தங்கம், போதை மருந்து, கரன்ஸி கடத்துபவர்களைக் கைது செய்வது தினந்தோறும் நடக்கிறது. சென்னை விமானநிலையத்தில் அடிக்கடி இதுபோன்ற கடத்தல் சம்பவங்களை சுங்கத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சென்னையிலிருந்து தங்கம் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசிய செய்தியின் படி ராமநாதபுரத்தை சேர்ந்த நௌஃபாரும் (28), சென்னையைச் சேர்ந்த சபூர் பாத்திமா (44), திருச்சியைச் சேர்ந்த தில்ஷாத் (39) ஆகிய இரண்டு பெண்களும்
 

கடத்தல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிலும் வெளிநாட்டிலிருந்து தங்கம், போதை மருந்து, கரன்ஸி கடத்துபவர்களைக் கைது செய்வது தினந்தோறும் நடக்கிறது.

சென்னை விமானநிலையத்தில் அடிக்கடி இதுபோன்ற கடத்தல் சம்பவங்களை சுங்கத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சென்னையிலிருந்து தங்கம் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசிய செய்தியின் படி ராமநாதபுரத்தை சேர்ந்த நௌஃபாரும் (28), சென்னையைச் சேர்ந்த சபூர் பாத்திமா (44), திருச்சியைச் சேர்ந்த தில்ஷாத் (39) ஆகிய இரண்டு பெண்களும் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். பாதுகாப்பு சோதனைக்கு பிறகு ஃபிளை துபாய் FZ8518 என்ற விமானத்திற்கு செல்ல முற்படுகையில் விமான நிலைய சுங்கத்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

நௌஃபார் வைத்திருந்த முதுகு பையில் ஓர் பர்ஸின் உள்ளே வெள்ளை காகிதத்தில் 2800 அமெரிக்க டாலர், 2500 சவுதி ரியால், 3,500 யூரோ, 4,000 சுவிஸ் பிராங்க் ஆகியவை மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே மற்றொரு வழக்கில் தொடர்புள்ள அவரிடமிருந்து ரூ. 8.86 இலட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் கைப்பற்றப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

இரு பெண்களிடம் நடைபெற்ற சோதனையில் 11000 அமெரிக்க டாலர் (தலா 5500 டாலர்) அவர்களது உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அவர்களது கைப்பையில் 6200 அமெரிக்க டாலர் (தலா 3100 டாலர்) கைப்பற்றப்பட்டது.

மொத்தமாக ரூபாய் 21.30 இலட்சம் மதிப்பில் 20000 அமெரிக்க டாலர் 2500 சவுதி ரியால் 3,500 யூரோ 4,000 சுவிஸ் பிராங்க் ஆகியவை சுங்கச் சட்டம், அயல்நாட்டு பரிமாற்ற மேலாண்மை (பணத்தின் ஏற்றுமதி இறக்குமதி) கட்டுப்பாடுகள் 2015-இன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.

மற்றொரு நிகழ்வில் துபாயில் இருந்து ஃபிளை துபாய் FZ8517 என்ற விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த முகமது அம்சாத் (33) என்பவரை விமான நிலைய சுங்கத்துறையினர் தடுத்து நிறுத்தினர். அவரிடம் நடைபெற்ற சோதனையில் அவரது உடலில் 260 கிராம் எடையிலான தங்க பசை அடங்கிய பொட்டலம் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது அவரிடம் இருந்து ரூ. 11.25 லட்சம் மதிப்பில் 220 கிராம் தங்கம் சுங்கச் சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.