×

கடனை கொடுத்தார்கள் -உடலை எரித்தார்கள் -கடன் வாங்கியவருக்கு நடுரோட்டில் நடந்த கொடுமை

கடனை கொடுக்காத ஒரு வாலிபரை, கடன் காரர்கள் நடுரோட்டிலேயே தீ வைத்து கொளுத்தினார்கள் குஜராத்தின் அஹமதாபாத்தில் பாவ்நகரில் பதான் என்ற 19 வயதான டீனேஜ் வாலிபர் வசித்து வந்தார்.அவர் அதே பகுதியில் வசிக்கும் லாலா கோட்டிலா என்பவரிடமிருந்து இருந்து ரூ .40,000 கடன் வாங்கியுள்ளார். ஒரு மாதத்திற்குப் பிறகு, மஹிபத் கோட்டிலா என்ற மற்றொரு நபரிடமிருந்து ரூ .20,000 கடன் வாங்கினார். அதற்கு பிறகு அந்த இளைஞன் அசல் தொகையையும் வட்டியையும் செலுத்தவில்லை. இதனால் அந்த கடன்
 

கடனை கொடுக்காத ஒரு வாலிபரை, கடன் காரர்கள் நடுரோட்டிலேயே தீ வைத்து கொளுத்தினார்கள்

குஜராத்தின் அஹமதாபாத்தில்  பாவ்நகரில் பதான் என்ற 19 வயதான டீனேஜ் வாலிபர் வசித்து வந்தார்.அவர் அதே பகுதியில் வசிக்கும்  லாலா கோட்டிலா என்பவரிடமிருந்து  இருந்து ரூ .40,000 கடன் வாங்கியுள்ளார். ஒரு மாதத்திற்குப் பிறகு, மஹிபத் கோட்டிலா என்ற மற்றொரு நபரிடமிருந்து ரூ .20,000 கடன் வாங்கினார். அதற்கு பிறகு அந்த இளைஞன் அசல் தொகையையும்  வட்டியையும்  செலுத்தவில்லை.

இதனால் அந்த கடன் கொடுத்த நபர்கள் பதான் மீது கோபம் கொண்டனர் .மேலும் அவரிடம் கடனை கேட்டு பலமுறை சண்டை போட்டார்கள் .அப்போதெல்லாம் பதான் சீக்கிரம் கடனை தந்து விடுவதாக கூறினார் .ஆனால் அவர் கடனை சொன்ன தேதியில் கொடுக்கவில்லை .

இதனால் அந்த  பதான் வெள்ளிக்கிழமை இரவு 10:30 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது அவருக்கு கடன் கொடுத்த லாலா அவரை வழி மறித்து நிறுத்தினார். அப்போது கடனை கேட்டார் .ஆனால் தன்னிடம் பணமில்லை என்று பதான் கூறியதும், அப்போது அங்கிருந்த ​​மஹிபத் தன்னிடமிருந்த பெட்ரோலை எடுத்து அந்த பதான்  மீது ஊற்றினார் .பிறகு  அவரை தீ வைத்து கொளுத்தினார் .இந்த தீயில் கருகிய பதான் நடுரோட்டிலேயே மயங்கி விழுந்தார் .அதன் பிறகு 60 சதவீத தீக்காயங்களுடன் இருந்த பதானை அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார் .அதன்  பிறகு பொலிஸார் வழக்கு பதிவு செய்து லாலாவையும் ​​மஹிபத்தையும்  கைது செய்தனர் .