×

கொளத்தூர் ராஜமங்கலத்தில் பெண்ணிடம் செயின் பறித்த இருவர் வாகன சோதனையில் சிக்கினர்!

சென்னை கொளத்தூர் சிவசக்தி நகரை சேர்ந்த சுஜாதா (வயது 38) என்பவர் கடந்த 7ஆம் தேதி அன்று ஜெயராம் தெருவில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். இவரைப் பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம மனிதர்கள் இருவர் திடீரென்று இவரின் கழுத்திலிருந்த தாலி செயின் ,ஐந்து சவரன் தங்க நகையை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் சென்றனர். இதுபற்றி சுஜாதா, கொளத்தூர் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார்
 

சென்னை கொளத்தூர் சிவசக்தி நகரை சேர்ந்த சுஜாதா (வயது 38) என்பவர் கடந்த 7ஆம் தேதி அன்று ஜெயராம் தெருவில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். இவரைப் பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம மனிதர்கள் இருவர் திடீரென்று இவரின் கழுத்திலிருந்த தாலி செயின் ,ஐந்து சவரன் தங்க நகையை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் சென்றனர்.

இதுபற்றி சுஜாதா, கொளத்தூர் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து ஆய்வு செய்தனர். அதில் இருவர் பெண்ணிடம் செயினை பறிப்பது தெரியவந்தது.

பின்னர் அவர்களை ராஜமங்கலம் தனிப்படை போலீசார் தேடிவந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கொளத்தூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த இருவரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்ததில், அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் (22)பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த குமரன் ( 23 ) என்பவர்கள் என்று தெரியவந்தது. அவர்களிடம் மேலும் விசாரித்ததில், இவர்கள்தான் கொளத்தூர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது.

இவர்களை விசாரணை செய்த அண்ணாநகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் கண்ணன், இவர்கள் இருவரின் மேல் வழக்கு பதிவு செய்து இவர்களிடம் இருந்த ஆறு பவுன் தங்க செயினையும் இருசக்கர வாகனம் ஒன்றையும் செல்போனையும் பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட இருவரும் பெரம்பூர் பகுதியில் கடந்த வாரம் ஒரு பெண்ணிடம் 1சவரன் தங்க நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்தது.

கைது செய்த இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.