×

“வாலிபால் ஆடலாம் வா..”- மாணவியை சீரழித்த வக்கிர பயிற்சியாளர்

 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் பிளஸ் டூ மாணவியை ஆசை வார்த்தை கூறி பாலியல் உறவுக்கு ஆளாக்கிய வாலிபால் விளையாட்டு பயிற்சியாளர் முகமது கலிலூர் ரஹ்மான் என்பவரை போக்சோ சட்டத்தில் போலீசார்  கைது செய்தனர். 

திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி வாலிபால் விளையாட்டில் சிறந்து விளங்கினார். இந்நிலையில் பள்ளிக்கு வாலிபால் பயிற்சி அளிக்க வந்த நாகை மாவட்டம் தோப்புத் துறையைச் சேர்ந்த முகமது கலிலூர் ரஹ்மான் (36) வாலிபால் கோச் பயிற்சியாளர், இந்த மாணவியிடம் உன்னை மாநில அளவில் விளையாட்டு வீராங்கனையாக தயார் செய்கிறேன். உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி மாணவியை திருச்சி, ஓசூர், புதுச்சேரி ச்சேரி வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொடர்பு வைத்துள்ளார். 

வாலிபால் பயிற்சியாளருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் உள்ள நிலையில் அவரது மனைவி இது குறித்து அறிந்து, திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார்  கலிலூர் ரஹ்மானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.