வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி!
சென்னை ஆலந்தூரில் கணவனை இழந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆளும் தமிழக வெற்றி கழகத்தின் ஆலந்தூர் வடக்கு பகுதி செயலாளர் வேம்புலி என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்பவர் மீது பாலியல் தொல்லை, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மவுண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கணவனை இழந்த பெண்ணுக்கு மொபைலில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதோடு, வீட்டில் அவர் தனியாக இருப்பதை அறிந்து கொண்டு இருதினங்களுக்கு முன் நள்ளிரவு நேரத்தில் அவரது வீட்டிற்குள் சென்ற ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனையடுத்து அப்பெண் கூச்சலிட்டதும் த.வெ.க நிர்வாகி வேம்புலி தப்பிச் சென்றார். பின்னர் மவுண்ட் காவல் நிலையத்தில் அப்பெண் அளித்த புகாரின் பேரில் த.வெ.க நிர்வாகி வேம்புலி மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், பாலியல் தொல்லை அளித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே அண்மையில் வேம்புலி கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக தவெக தலைமை அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடதக்கது.