×

தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டிக்கொலை- 5 பேர் கைது

 

சென்னை அடையாறில் நேற்றிரவு ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தவெக நிர்வாகி கண்ணன் சென்னை அடையாறில் நேற்றிரவு ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்டார். இவர் போலீசாரின் B பிரிவு குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர். பெசண்ட் நகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன்,  அதிமுகவில் இருந்த நிலையில், சமீபத்தில் தவெகவில் இணைந்தார். 2009ல் சிவா என்பவரை கண்ணன் கொலை செய்ததாக கூறப்படும் நிலையில், சிவாவின் சகோதரர் மகன் தலைமையிலான கும்பல், நேற்றிரவு கண்ணனை கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், இக்கொலையில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டனர். 5 பேர் கும்பலை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். சிவா கொலைக்கு பழிவாங்கும் விதமாக கண்ணன் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை விசாரணை நடத்திவருகின்றனர்.