×

3 முறை கரு கலைப்பு… மிரட்டி பணம் பறிப்பு… யார் இந்த அனு!- ஷோபனா தற்கொலையில் வெளி வராத தகவல்

உன்னால் மூன்று முறை கர்ப்பம் கலைத்ததாக கூறிய விஜயகுமாரை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார் ஈரோட்டை சேர்ந்த அனு. இந்த தகவல் மனைவிக்கு தெரிந்ததும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த எருமனூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமாருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலமங்கலத்தை சேர்ந்த ஷோபனாவுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 50 பவுன் நகைகள், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக்கும், வீட்டுக்கு தேவையான அனைத்துப்
 

உன்னால் மூன்று முறை கர்ப்பம் கலைத்ததாக கூறிய விஜயகுமாரை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார் ஈரோட்டை சேர்ந்த அனு. இந்த தகவல் மனைவிக்கு தெரிந்ததும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த எருமனூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமாருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலமங்கலத்தை சேர்ந்த ஷோபனாவுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 50 பவுன் நகைகள், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக்கும், வீட்டுக்கு தேவையான அனைத்துப் பொருட்களும் வரதட்சணையாக ஷோபனா வீட்டார் கொடுத்துள்ளனர். இந்த தம்பதிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு விஜயகுமார், சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் 85 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருந்து வேலை செய்வதாக கூறி விஜயகுமார் ஊருக்கு வந்துள்ளார். வீட்டில் அலுவலக வேலையை சரியாக செய்யாததால் அவரை பணி நீக்கம் செய்தது நிர்வாகம். இந்த நிலையில், “என் மகன் வேலை போனதிற்கு நீ வந்த நேரம்தான் காரணம்” என்று கூறி மருமகளை தரக்குறைவாக பேசியதோடு, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார் மாமியார் செல்வராணி.

இந்த நிலையில்தான் ஈரோட்டை சேர்ந்த அனு என்ற பெண், விஜயகுமார் செல்போனுக்கு பேசியுள்ளார். இந்த போனை ஷோபனா எடுத்துள்ளார். அப்போது, “விஜயகுமாரால் நான் மூன்று முறை கர்ப்பத்தை கலைத்துள்ளேன். நான் கேட்ட பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி விட்டான்” என்று கூறியதோடு, விஜயகுமாரின் காதல் லீலைகளை போட்டு உடைத்துவிட்டார் அனு. இதனால், வேதனை அடைந்துள்ளார் ஷோபனா. தனது காதல் லீலை மனைவிக்கு தெரிந்துவிட்டதால் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார் விஜயகுமார். இதன் பிறகே தற்கொலை முடிவுவை ஷோபனா எடுத்துள்ளார்.

தற்கொலைக்கு முன்பு தனது செல்போனில் இரண்டு வீடியோக்களை பதிவிட்டுள்ளார் ஷோபனா. ஒரு வீடியோவில், தனது கணவரின் காதலி குறித்தும், மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவது குறித்தும் பேசியுள்ளார். 2வது வீடியோவில், தன்னை கணவன் அடிக்கும்போது, வீட்டுக்குள் சென்று அறையை பூட்டி அடிக்கச்சொல்லி மாமியார் தூண்டியதாகவும் கூறியுள்ளார். மேலும், எனது குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படியும், என்னுடைய அப்பா இறந்த இடத்தின் அருகே தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்றும் தனது தாயிடம் கண்ணீருடன் கூறுகிறார். பின்னர் இந்த இரண்டு வீடியோக்களையும் தனது தாயாருக்கும், உறவினர்களுக்கும் அனுப்பிவிட்டு நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார் ஷோபனா. இது குறித்து ஷோபனாவின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இரண்டு வீடியோக்களையும், முன்னாள் காதலி பேசிய ஆடியோவையும் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், ஷோபனாவை வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதாகவும், அடித்து துன்புறுத்தி தற்கொலைக்கு தூண்டியதாகவும் விஜயகுமார், அவரது தந்தை அன்பழகன், தாய் செல்வராணி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். காவல் நிலையத்தில் இருந்து தலைகுனிந்து வெளியே வந்த விஜயகுமார் உள்ளிட்ட 3 பேரையும் கடலூர் மத்திய சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்.

ஷோபனாவின் கடைசி ஆசையை நிறைவேற்றும்படி அவரது ஒரு வயது மகனை அவரது தாயாரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். இதனிடையே, விஜயகுமார் திருமணம் ஆனவர் என தெரிந்தும் அவருடன் ஊர் சுற்றியோடு, ஷோபனாவை இந்த நிலைக்கு ஆளாக்கிய அனுவையும் கைது செய்ய வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் ஈரோடு அனு கைது செய்யப்படுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.