×

ஒரே வீட்டில் 20 வருஷம் குடித்தனம்… போலீஸில் சிக்கவைத்த கொள்ளையன்… ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து கடலில் உடலை வீசிய இளைஞர்

ஒரு வீட்டில் 20 வருஷமாக பெண்ணுடன் வாழ்ந்து வந்த கொள்ளையன், அங்கு தங்கியருந்த வாலிபரை பல வழக்குகளில் சிக்க வைத்துள்ளார். இதனால் கோபம் அடைந்த இந்த வாலிபர், கொள்ளையனின் கறுத்தை அறுத்து கடலில் வீசி சென்றுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னை திருவொற்றியூர் குப்பம் அப்பர் நகர் கன்னி கோவில் தெரு அருகே கடற்கரையில் நேற்று முன்தினம் ஆண் பிணம் கரை ஒதுங்கியது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், உடலை
 

ஒரு வீட்டில் 20 வருஷமாக பெண்ணுடன் வாழ்ந்து வந்த கொள்ளையன், அங்கு தங்கியருந்த வாலிபரை பல வழக்குகளில் சிக்க வைத்துள்ளார். இதனால் கோபம் அடைந்த இந்த வாலிபர், கொள்ளையனின் கறுத்தை அறுத்து கடலில் வீசி சென்றுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை திருவொற்றியூர் குப்பம் அப்பர் நகர் கன்னி கோவில் தெரு அருகே கடற்கரையில் நேற்று முன்தினம் ஆண் பிணம் கரை ஒதுங்கியது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கழுத்தை அறுத்தும், தலையில் காயமும் இருந்ததால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியது காவல்துறை. விசாரணையில் அவரது பெயர் ஆனந்த் என்ற கருப்பு ஆனந்த் (45) என்பதும், இவர் மீது திருட்டு, வழிப்பறி உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும், கல்பனா என்ற பெண்ணுடன் கடந்த 20 வருடங்களாக குடும்பம் நடத்தி வந்துள்ளார் ஆனந்த்.

அதே வீட்டில் பெற்றோரை இழந்த இம்ரான் (25) என்பவரும் வசித்து வந்துள்ளார். ஆனந்த்-கல்பனா இருவரையும் அம்மா-அப்பா என்று அழைத்து வந்துள்ளார். ஆனந்த் பல்வேறு குற்ற வழக்குகளில் இம்ரானையும் சேர்த்து காவல்துறையினரிடம் சிக்கவைத்து விடுவாராம். இதனால் இருவரும் அடிக்கடி சிறைக்கு சென்று வந்துள்ளனர். இதனால் ஆனந்த் மீது கோபத்தில் இருந்துள்ளார் இம்ரான். கடந்த 5ம் தேதி நீண்ட நாட்களுக்கு பிறகு கல்பனா வீட்டுக்கு வந்துள்ளார் ஆனந்த்.

அப்போது குடிபோதையில் இருந்த ஆனந்துக்கும், இம்ரானுக்கும் தகராறு ஏற்பட்டதாடு, ஒருவரையொருவர் விரட்டிச் சென்றுள்ளனர். கடற்கரையோரம் சென்றபோது இம்ரானை கத்தியால் குத்த முயன்றுள்ளார் ஆனந்த். அப்போது, ஆனந்த் தலையில் இம்ரான் பலமாக தாக்கியதோடு, கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார். பின்னர் உடலை கடலில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதுபோல் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் கரை ஒதுங்கிய உடலை பார்த்து அங்கிருந்த மீனவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இம்ரானை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.