×

கள்ளக்காதலனின் ஆண் உறுப்பை கொடூரமாக வெட்டி கொன்ற பெண்!

 

பல்லாவரம் அருகே கள்ளத்தொடர்பு காரணமாக வாலிபருக்கு ஆண் உறுப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வெட்டப்பட்ட நிலையில், இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் உயிரிழந்தார். 

பல்லாவரம் அடுத்த திரிசூலம்  அம்மன் நகர் நாலாவது தெரு பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் வயது (28). கட்டிட தொழிலாளியான இவர், கடந்த 14 புதன்கிழமை இரவு 10 மணி அளவில் பழைய பல்லாவரம் பகுதியில் இரண்டு பெண்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள்  செல்வகுமாரை தலை, வாய், ஆண் உருப்பு உள்ளிட்ட இடங்களில்  சரமாரியாக  வெட்டி விட்டு தப்பி சென்றனர். பலத்த காயம் அடைந்த செல்வக்குமாரை மீட்டு தாம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைகாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில்  இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். 

இதுகுறித்து பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், இறந்து போன நபர் பழைய பல்லாவரம் பகுதியை சேர்ந்த திருமணமான ரீனா(24). இவர் விஜய் என்கிற நபரை திருமணம் செய்து பிரிந்து வாழ்ந்துவந்தார். இந்த நிலையில் ரீனாவை செல்வகுமார் வீட்டிலேயே தாலிகட்டி குடும்பம் நடத்திய நிலையில், ரீனாவின் தோழி ரெஜிதாவிடம் பழக்கம் ஏற்பட்டது.  இதனால் ரீனா பிரிந்து சென்றார். பிரிந்து சென்ற  ரீனா ஆலெஸ் பாண்டியன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால்  ஆத்திரம் அடைந்த செல்வகுமார்  ரீனா, ரெஜிதா  ஆகியோருடன்  அடிக்கடி மதுபோதையில் தகராறில் ஈடுபட்டார். செல்போனில் தகாத வார்த்தையில் பேசிவந்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த ரீனா அவரின் புது நண்பர் அலெக்ஸ் பாண்டியனிடமும், ரெஜிதா அவரிடம் கள்ள தொடர்பில் உள்ள 17 சிறார்  ஆகியோரை ஏவி விட்டு, 14ம் தேதி இரவு செல்வகுமாரை பல்லாவரம் திரிசூலம் பகுதிக்கு வரவழைத்து  ஆண்கள் இருவரும் வெட்ட பெண்கள் வேடிக்கை பார்த்துள்ளனர். செல்வகுமாரரை வெட்டிவிட்டி இருவரும் சென்ற நிலையில்  ரீனா மட்டும் தாக்குதலில் தானும் பாதிக்கப்பட்டதாக மயங்கி விழுந்ததாக நடித்துள்ளர் என போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ரீனா, ரெஜிதா அவருக்கு உறுதுணையாக இருந்த சிறார் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். சிறார் சீர் திருதப்பள்ளியில் அடைந்த நிலையில் இரண்டு பெண்களையும் புழல் சிறையில் அடைந்தனர். மேலும் அலெக்ஸ் பண்யனை தேடி வருகின்றனர்.