×

`பைக்கில் மோதல்; ஆபாசமாக அர்ச்சனை!’- திருச்சியில் நடுரோட்டில் முதியவரை கதறவைத்த போலீஸ் ஏட்டு

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற தந்தை, மகன் காவல்துறையினர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த துயர சம்பவம் அடங்குவதற்குள் திருச்சியில் முதியவரை ஒருவரை தலைமைக் காவலர் ஒருவர் நடுரோட்டில் தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. திருச்சி எம்.ஜி.ஆர் சிலை ரவுண்டானா அருகே போலீஸார் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது, சைக்கிள் வந்த முதியவர் அந்த வாகனத்தின் மீது மோதியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த காவலர், அந்த முதியவரை சரமாரியாக
 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற தந்தை, மகன் காவல்துறையினர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த துயர சம்பவம் அடங்குவதற்குள் திருச்சியில் முதியவரை ஒருவரை தலைமைக் காவலர் ஒருவர் நடுரோட்டில் தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருச்சி எம்.ஜி.ஆர் சிலை ரவுண்டானா அருகே போலீஸார் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது, சைக்கிள் வந்த முதியவர் அந்த வாகனத்தின் மீது மோதியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த காவலர், அந்த முதியவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த சம்பவம் அனைத்தும் அங்கிருந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த திருச்சி காவல்துறை ஆணையர் வரதராஜன், முதியவரைத் தாக்கிய காவலர் குறித்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார். இதையடுத்து, எம்.ஜி.ஆர் சிலை ரவுண்டானா மற்றும் ஐயப்பன் கோயில் சாலை ஆகியவற்றில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்துக்கொண்டு போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, உறையூர் சட்டம்-ஒழுங்கு கூடுதல் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த இளங்கோ அந்த வீடியோவில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, இளங்கோவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த தலைமைக் காவலர் இளங்கோ, முதியவர் குடித்துவிட்டு தன்னை தகாத வார்த்தையில் பேசினார் என்றும் அதனால் அவரை அடித்ததாகவும் கூறியிருக்கிறார். இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாத காவல்துறை ஆணையர் வரதராஜன், சீருடை அணிந்து கொண்டு பொது இடத்தில் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறி இளங்கோவனை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்தார்.

இது குறித்து இளங்கோவிடம் பேசியபோது, “எம்.ஜி.ஆர் சிலை ரவுண்டானா இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தேன். அப்போது, பெரியவர் ஒருவர் நான் வருவதைக் கவனிக்காமல் வலது புறமாகத் சைக்கிளில் திரும்பினார். சுதாரித்துக்கொண்ட நான் வண்டியை உடனே நிறுத்திவிட்டேன். ஆனாலும் அவர்மீது நான் மோதிவிட்டேன். அப்போது, `பெரியவரே ஒழுங்கா போகமாட்டியா’ன்னு கேட்டேன். அதற்கு அவர் `நீங்கெல்லாம் கொலகாரப் பாவிகள்தானே.

இன்னும் எத்தன பேர கொல்லப் போறீங்கன்னு தெரியல்லையே’ என்று சம்பந்தமில்லாமல் பேசினார். ஒழுங்கா வீட்டுக்குப் போ’ என அவரிடம் கூறினேன். அப்போது, தகாத வார்த்தையில எனது அம்மாவை திட்டினார். அந்த ஆத்திரத்தில்தான் அடித்தேன். அம்மாவைப் பற்றிப் பேசினால் கோபம் வரத்தான் செய்யும். நான் அடித்துவிட்டேன் என்றதால் என்னை விமர்சனம் செய்கிறார்கள். யாரையும் தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்யாதீர்கள்” என்று அறிவுரை கூறி முடித்துக் கொண்டார்.