×

`தாயுடன் தகாத உறவு; கள்ளக்காதலனை ஓடஓட விரட்டி கொன்ற மகன்!’- சென்னையில் இரவில் நடந்த பயங்கரம்

வீட்டில் தாயுடன் உல்லாசமாக இருந்து வந்த கள்ளக்காதலனை மகன் கொலை செய்துள்ளார். இந்த பயங்கர சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்த முனியாண்டி (46) என்பவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், மேற்கு சைதாப்பேட்டை பழைய மாம்பலம் சாலையைச் சேர்ந்த செல்வி என்பவருடன் முனியாண்டிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. பின்னர் மேற்கு சைதாப்பேட்டையிலேயே இருவரும் ஒன்றாக கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இது செல்வியின்
 

வீட்டில் தாயுடன் உல்லாசமாக இருந்து வந்த கள்ளக்காதலனை மகன் கொலை செய்துள்ளார். இந்த பயங்கர சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்த முனியாண்டி (46) என்பவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், மேற்கு சைதாப்பேட்டை பழைய மாம்பலம் சாலையைச் சேர்ந்த செல்வி என்பவருடன் முனியாண்டிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. பின்னர் மேற்கு சைதாப்பேட்டையிலேயே இருவரும் ஒன்றாக கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இது செல்வியின் மகன் வேலாயுதத்திற்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, முனியாண்டியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார் வேலாயுதம். இந்த நிலையில், நேற்றிரவு இரவும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் வெளியே சென்ற வேலாயுதம், தனது நண்பர்களுடன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த முனியண்டியை அவர்கள் கத்தியால் குத்தினர்.

உயிர் பிழைக்க தெருவில் ஓடியுள்ளார் முனியாண்டி. ஆனால் வேலாயுதம் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை துரத்தி துரத்தி வெட்டி கொலை செய்தார். பின்னர் அங்கிருந்த கும்பல் தப்பியது. தகவல் அறிந்து விரைந்து வந்த குமரன் நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து முனியாண்டி உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய வேலாயுதம் மற்றும் அவரது நண்பர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.