×

`மனைவியுடன் சண்டை; குழந்தைகளையை எரித்துக்கொல்ல முயன்ற தந்தை!’- டிஎஸ்பி ஆபீஸில் பதறிய காவலர்கள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தனது இரண்டு பிள்ளைகளையும் டிஎஸ்பி அலுவலகத்தில் தீவைத்து எரிக்க முயன்ற தந்தையால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியை சேர்ந்த அம்ஜத் உசேன் (35)- தஸ்லிமா தம்பதிக்கு இசாஜ் அகமது (4), இத்ரிஸ் (1½) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். உசேன் அப்பகுதியில் எலெக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இதனிடையே, உசேன்- தஸ்லிமா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவரை பிரிந்து உடுமலைபேட்டையில் உள்ள தனது பெற்றோர்
 

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தனது இரண்டு பிள்ளைகளையும் டிஎஸ்பி அலுவலகத்தில் தீவைத்து எரிக்க முயன்ற தந்தையால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியை சேர்ந்த அம்ஜத் உசேன் (35)- தஸ்லிமா தம்பதிக்கு இசாஜ் அகமது (4), இத்ரிஸ் (1½) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். உசேன் அப்பகுதியில் எலெக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இதனிடையே, உசேன்- தஸ்லிமா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவரை பிரிந்து உடுமலைபேட்டையில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார் தஸ்லிமா. அதோடு, கணவர் மீது உடுமலைப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதே நேரத்தில் மனைவி தஸ்லிமா மீது பழனி தாலுகா காவல் நிலையத்தில் உசேன் புகார் அளித்தார். இது தொடர்பாக காவல் நிலையங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந் த நிலையில், பழனி தாலுகா காவல்துறையினர், ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக கூறி பழனி டிஎஸ்பி அலுவலகத்துக்கு தனது 2 குழந்தைகளுடன் உசேன் வந்துள்ளார். அப்போது, பையில் தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை எடுத்து குழந்தைகள் மீதும் தன் மீதும் ஊற்றி தீ வைக்க முயன்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த காவலர்கள் அதிர்ச்சி அடைந்து, அவரை மடக்கி பிடித்தனர். இதனால் பெரும் உயிரிழப்பை காவல்துறையினர் தடுத்தனர். இரண்டு குழந்தைகளையும் மீட்ட பெண் காவலர்கள், குழந்தைகளின் உடலில் தண்ணீரை ஊற்றினர். பின்னர் குழந்தைகளுக்கு மாற்று உடையை அணிவித்தனர். உசேனை பழனி தாலுகா காவல் நிலையத்துக்கு அழைத்து சென்ற காவலர்கள் அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் பெற்ற பிள்ளைகளையே பெட்ரோல் ஊற்றி தீவைக்க முயன்ற தந்தையால் அந்த பகுதியில் பரபரப்புடன் காணப்பட்டது.